MAP

பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் மக்கள்  (ANSA)

இறைநம்பிக்கையில் ஒன்றிணைந்து வாழ உதவும் இடம்

இறைநம்பிக்கையில் ஒன்றிணைந்து வாழ்ந்து கத்தோலிக்கர்களின் தவக்காலத்தையும் இஸ்லாமியரின் இரம்தான் நோன்பையும் முழுமையாக அனுபவிக்க, ஹைதராபத் எலிசபெத் மருத்துவமனையின் அனைத்து கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் ஊழியர்கள் ஒன்றிணைந்து சிறப்பிக்கின்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்பிக்கை மற்றும் திறந்த தன்மைக்கு ஒரு சிறந்த சான்றாகவும், கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் ஊழியர்களின் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி ஊக்குவிக்கும் விதமாகவும் ஹைதராபாத் தூய எலிசபெத் மருத்துவமனை ஊழியர்கள் செயல்படுகின்றார்கள் என்று கூறியுள்ளார் அருள்பணி Robert McCulloch

மார்ச் 24, திங்கள்கிழமை பீதேஸ் எனப்படும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தூய கொலோம்பியன் சபை ஆஸ்திரேலிய மறைப்பணியாளரான அருள்பணி Robert McCulloch.

இறைநம்பிக்கையில் ஒன்றிணைந்து வாழ்ந்து, கத்தோலிக்கர்களின் தவக்காலத்தையும் இஸ்லாமியரின் இரமதான் நோன்பையும் முழுமையாக அனுபவிக்க, ஹைதராபத் தூய எலிசபெத் மருத்துவமனையின் அனைத்து கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் ஊழியர்கள் இணைந்து சிறப்பிக்கின்றனர் என்று எடுத்துரைத்துள்ளார் அருள்பணி இராபர்ட்.

மருத்துவமனை அருகிலுள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒன்றிணைந்து செபித்து உண்டு சிறப்பிக்க, கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி ராபர்ட்.

ஒவ்வொருவரும் அவரவர் இறைநம்பிக்கையில் ஒன்றிணைந்து வாழ்ந்து, மக்களிடையே மனித ஆன்மிக, தொழில்முறை பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக இச்செயல் இருக்கின்றது என்றும், இதன்வழியாக மருத்துவமனை மனித குலத்திற்கு பணியாற்றும் ஓர் இடமாக மாறுகிறது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி இராபர்ட்.

இத்தகைய மதநல்லிணக்கச் செயல்பாட்டினால் ஒருவர் மற்றவருடனான உரையாடல் மேம்படுகின்றது, மற்றவர்கள் மேல் உள்ள மரியாதை ஆழப்படுத்தப்படுகிறது என்றும், உரையாடல் மற்றும் பகிர்வை வளர்ப்பதற்கும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி ஆன்மிக பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்துவதற்குமான ஓர் நிகழ்வாக உள்ளது என்றும் கூறியுள்ளார் அருள்பணி இராபர்ட்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 மார்ச் 2025, 14:28