நைஜீரியாவில் கடத்தப்பட்ட இரு அருள்பணியாளர்கள் விடுதலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நைஜீரியாவில் கடத்தப்பட்ட இரு அருள்பணியாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பிதெஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
நைஜீரியாவின் யொலா மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி மாத்தியூ டேவிட் டுட்செமி என்பவரும், ஜலிங்கோ மறைமாவட்டத்தின் ஆபிரகாம் சவும்மாம் என்பவரும் கடத்தப்பட்ட ஏறக்குறைய 16 நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை கைதுச் செய்ததைத் தொடர்ந்து, இவ்விரு அருள்பணியாளர்களும் வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்தது விடுதலைக்கு வழி வகுத்துள்ளது.
இவ்விரு அருள்பனியாளர்களை விடுவிக்க நைஜீரியா முழுவதும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு, விடுதலை இடம்பெற்றுள்ளது.
அருள்பணியாளர்களின் விடுதலைக்கென கடத்தல்காரர்களுக்கு எவ்வித பிணையத் தொகையும் வழங்கப்பட்டவில்லை எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்