MAP

ஒளிவீசும் உயிர்ப்பின் கல்லறை ஒளிவீசும் உயிர்ப்பின் கல்லறை 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 20

மரணம் வாழ்க்கையின் முடிவல்ல, நிலைவாழ்விற்கான உருமாற்றம் என்பதை எடுத்துரைத்து, கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்ட நாம் அவரோடு உயிர்த்து புதிய வாழ்வைக் கொடையாகப் பெறுகின்றோம் என்ற நம்பிக்கையை இறைவன் நமக்குத் தருகின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறந்து உயிர்த்தெழுந்த இயேசுவே நமது நம்பிக்கையின் இதயம். திருத்தூதர் புனித பவுல் “மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்” (1 கொரி. 15:3-5)  என்ற இறைவார்த்தைகளின் வழியாக இயேசுவே நமது நம்பிக்கையின் இதயம் என்பதை வெளிப்படுத்துகின்றார். அதாவது இவ்வரிகளின் வழியாக கிறிஸ்து இறந்தார் அடக்கம் செய்யப்பட்டார், உயிர்த்தெழுந்தார், சீடர்களுக்குத் தோன்றினார் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார்.

இறைத்தந்தையின் அன்பு அவரை தூய ஆவியின் வல்லமையில் எழுப்பி, அவரது மனிதத்தை நமது மீட்பிற்கான முதல் பலனாக மாற்றியது. கிறிஸ்தவர்களாகிய நமது நம்பிக்கை இயேசுவின் உயிர்ப்பு வழியாக துல்லியமாக வெளிப்படுகின்றது. மரணம் வாழ்க்கையின் முடிவல்ல, நிலைவாழ்விற்கான உருமாற்றம் என்பதை எடுத்துரைத்து, கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்ட நாம் அவரோடு உயிர்த்து புதிய வாழ்வைக் கொடையாகப் பெறுகின்றோம் என்ற நம்பிக்கையை இறைவன் நமக்குத் தருகின்றார். மரணத்தின் சுவரை உடைத்து புதிய வாழ்விற்கு உயிர்த்தெழுந்தார் இயேசு.  மரணத்தின் சுவரை உடைத்து, அதை நிலைவாழ்விற்கான ஒரு பாதையாக மாற்றுகின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2025, 16:14