MAP

வத்திக்கான் வளாகம் வத்திக்கான் வளாகம்   (AFP or licensors)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணைமடல் பகுதி 18

எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். (உரோமர் 12:12)

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம்பிக்கை, அன்பு ஆகியவற்றோடு இணைந்து எதிர்நோக்கானது, கிறிஸ்தவ வாழ்க்கையின் சாராம்சத்தை வெளிப்படுத்துகின்றது. இறையியல் நற்பண்புகளின் முக்கோணத்தை உருவாக்குகின்றது. அவற்றின் பிரிக்க முடியாத பரிமாணத்தில், எதிர்நோக்கு என்பது, அடிப்படைப் பயிற்சியை மனதில் பதிக்கிறது, இருப்பின் திசையையும் நோக்கத்தையும் குறிக்கிறது. எனவே தான், திருத்தூதர் பவுல், “எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள்” (உரோமர் 12:12) என்று அழைக்கிறார். ஆம், நாம் எதிர்நோக்கினை மிகுதியாகப் பெற வேண்டும். நம் இதயங்களில் நாம் சுமந்து செல்லும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும், நம்பகத்தன்மையுடனும் கவரும் தன்மையுடனும் சான்று பகரவேண்டும்.

இதனால் நமது நம்பிக்கை மகிழ்ச்சியாகவும், பிறரன்பு செயல்கள் ஆர்வம் ஊட்டக்கூடியதாகவும் இருக்கும். இதனால் அனைவரும் ஒரு புன்னகையை, நட்பின் சைகையை, உடன்பிறந்த உணர்வுடன் கூடிய பார்வையை, நேர்மையான செவிசாய்ப்பை, இலவச பணியை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். எதிர்நோக்கின் சிறிய விதையை இயேசுவின் ஆவியில் பெற்றுக்கொள்பவர்களுக்கு இச்செயல்களை எளிதில் ஆற்றமுடியும். நமது எதிர்நோக்கின் அடித்தளம் என்ன? அதைப் புரிந்துகொள்ள, நமது நம்பிக்கைக்கான காரணங்களைப் பற்றி சிந்திப்பது நல்லது. “உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்” (1பேதுரு 3:15).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மார்ச் 2025, 13:40