MAP

உக்ரைன் அகதிகளுக்கு உதவும் பணிகள் உக்ரைன் அகதிகளுக்கு உதவும் பணிகள்  (AFP or licensors)

127,000 உக்ரைன் அகதிகளுக்கு உதவிகளை வழங்கியுள்ள இயேசு சபை

அவசர கால உதவிகள், உறைவிடங்கள், கல்விப் பணிகள், புதிய சமுதாயத்துடன் அவர்கள் வேரூன்ற உதவுதல் என பல்வேறு வகைகளில் இயேசு சபைப் பணி அமைப்புக்கள் செயலாற்றி வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் நாட்டை இரஷ்யா ஆக்ரமிக்க துவங்கியதிலிருந்து அண்மை நாடுகளுக்கு தப்பிச் சென்ற உக்ரைன் மக்களுக்கு பல்வேறு உதவிகளை ஆற்றிவருகிறது இயேசு சபையினர் உதவி நிறுவனம்.

ரொமேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் மொல்தோவாவில் அடைக்கலம் தேடியுள்ள பல இலட்சக்கணக்கான உக்ரைன் அகதிகளுக்கு உதவிகளை வழங்கிவரும், இயேசு சபை உதவி அமைப்புக்களின் கூட்டமைப்பான Xavier Network, JRS எனப்படும் அகதிகளுக்கான இயேசு சபை பணி மையத்துடன் இணைந்து சேவையாற்றி வருகிறது.

இரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதலுக்குப்பின் இதுவரை இயேசு சபை உதவி அமைப்பு ஒரு இலட்சத்து 27 ஆயிரம் உக்ரைன் அகதிகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளதுடன், 6 இலட்சத்து 12 ஆயிரம் தனிப்பட்ட உதவிகளையும் ஆற்றியுள்ளது.

அவசர கால உதவிகள், உறைவிடங்கள், கல்விப் பணிகள், புதிய சமுதாயத்துடன் அவர்கள் வேரூன்ற உதவுதல் என பல்வேறு வகைகளில் இயேசு சபைப் பணி அமைப்புக்கள் செயலாற்றி வருகின்றன.

போராட்டங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளைச் சந்தித்துவரும் உக்ரைன் அகதிகளுக்கு வருங்காலம் குறித்த நம்பிக்கைகளை வழங்குவதாக, அண்மை நாடுகளில் வாழும் உக்ரைன் அகதிகளிடையேயான இயேசு சபை அமைப்புக்களின் பணிகள் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மார்ச் 2025, 14:01