நேர்காணல் – எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டு அனுபவம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
"நாளுக்கு நாள், கடவுள் நமக்குத் தரும் எதிர்நோக்கின் கொடையால் நம் வாழ்க்கையை நாம் நிரப்பவேண்டும். எதிர்நோக்கு என்னும் கொடையைத் தேடும் அனைவருக்கும் அதைச் சென்றடைய அனுமதிக்கவேண்டும். எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது" என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களுக்கிணங்க இந்த 2025-ஆம் ஆண்டிற்கான யூபிலியானது நமது திருஅவையில் பல்வேறு வகைகளில் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் தலத்திருஅவைகளில் நடைபெறும் யூபிலி சிறப்பு நிகழ்வுகள் பற்றியும் எதிர்நோக்கின் ஆண்டு அனுபவம் பற்றியும் இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி டேனியல் சர்மா.
வேலூர் மறைமாவட்ட அருள்பணியாளரான டேனியல் சர்மா அவர்கள், சென்னை லொயோலா கல்லூரியில் காட்சித் தொடர்பாடலில் (vissual communication) முதுகலைக் கல்வி பயின்றவர். பங்குப்பணி, இறையியல், இளையோர் பணி, சிறைப்பணி, தகவல் தொடர்ப்புப்பணி ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது செம்மியமங்கலம் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்தந்தை டேனியல் சர்மா அவர்களை, எதிர்நோக்கின் திருப்பயனிகள் என்ற இந்த யூபிலி ஆண்டு அனுபவம் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்