நேர்காணல் – எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஓவிய விளக்கம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஓவியனின் நினைவில் இருக்கும் உருவத்திற்கு உயிர் கொடுப்பது ஓவியம். பழைய நினைவுகளின் ஆற்றலை மீட்டெடுக்கும் அற்புத சக்தி பெற்றது ஓவியம். காவியங்களையும் ஓவியங்களாக்கி காண்போர் கண்களுக்கு காட்சிகளை தெளிவுபடுத்தும் ஓவியரின் கைவண்ணம். வண்ணங்களில் மிளிரும் ஓவியங்கள் நம் எண்ணங்களில் புதிய வழியையும் காட்டுகின்றன. எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டு 2025ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து பற்றிய படத்தினை ஓவியமாக வடித்து மக்களுக்கு அதனை எளிய வடிவில் உணர்த்தி இருக்கின்றார். அருள்தந்தை பெலிக்ஸ். தந்தை அவர்களை எதிர்நோக்கின் திருப்பயணிகள் பற்றிய ஓவியம் குறித்த விளக்கத்தினை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்