நேர்காணல் – இந்திய மருத்துவ சகோதரிகள் மன்ற அனுபவம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுள் மிகவும் விரும்பிப் படைத்தப் படைப்பாகிய உயிர்களை நோயினின்றி காக்கும் உன்னதப் பணியினை செய்பவர்கள் மருத்துவர்கள். இவ்வுலகில் உள்ள உயிரினங்களைக் காத்து, மறுவாழ்வு அவர்களுக்கு உண்டு என்று உணர்த்துபவர்கள். முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றிற்கு ஏற்ப, தங்களது தொடர் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும் அளப்பரிய பணியினை இந்த அகிலத்தில் உள்ள மக்களுக்கு ஆற்றி வருபவர்கள் மருத்துவர்கள். உயிர்களைக் காக்கும் மருத்துவர்கள் கடவுளாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றார்கள். இத்தகைய உயிர்காக்கும் அற்புதப் பணியினை அறப்பணியாக, துறவற அருள்சகோதரிகளும் முழுமனதுடன் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய மருத்துவ சகோதரிகள் மன்றம் பற்றிய அனுபவங்களையும் கருத்துக்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அம்மன்றத்தின் தமிழக செயலரான மருத்துவர் அருள்சகோதரி லடிஸ்கா ரோஸ்லின். புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி லடிஸ்கா ரோஸ்லின் அவர்கள், சித்தமருத்துவராகப் பயிற்சி பெற்று கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தென்தமிழகத்தின் முத்துப்பட்டி அன்னை நலவாழ்வு இல்லத்தில் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றார். சகோதரி அவர்களை இந்திய மருத்துவ சகோதரிகள் மன்றம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்