MAP

அழிவுக்குள்ளாகியுள்ள காசா பகுதி அழிவுக்குள்ளாகியுள்ள காசா பகுதி  (AFP or licensors)

காசாவில் துவங்கியுள்ள தாக்குதல்கள் குழந்தைகளை பலிவாங்கி வருகிறது

இஸ்ராயேல் பாலஸ்தீனப் போர் துவங்கியதிலிருந்து 15 ஆயிரத்து 613 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 33ஆயிரத்து 900 குழந்தைகள் காயப்படுத்தப்பட்டுள்ளனர், ஏறக்குறைய 20 ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மத்தியக் கிழக்கின் காசா பகுதியில் மீண்டும் துவங்கியுள்ள தாக்குதல்கள் பெருமளவில் அப்பாவி பொதுமக்களையும், அதிலும் குறிப்பாக குழந்தைகளையும் பலிவாங்கிவருவதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் புனித பூமிக்கு பொறுப்பான அருள்பனி Ibrahim Faltas.

காசாவில் இடம்பெறும் மோதல்கள் குடும்பங்களில் மிகப்பெரும் தாக்கத்தையும் காயத்தையும் உருவாக்கியுள்ளது என்ற அருள்பணி பால்த்தாஸ் அவர்கள், காசா பகுதி குழந்தைகளுக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் தலத்திருஅவை ஆற்றிவருகிறது என எடுத்துரைத்தார்.

திருப்பீட தினசரியான L’Osservatore Romano வுக்கு காசாவின் இன்றைய நிலைகள் குறித்து நேர்முகம் வழங்கிய அருள்பணி பால்த்தாஸ் அவர்கள், குழந்தைகள் கொல்லப்படும் குற்றம் மனித குல வரலாற்றிலிருந்து எந்நாளும் அழிக்க முடியாத பாவக்கறை என உரைத்தார்.

இஸ்ராயேல் பாலஸ்தீனப் போர் துவங்கியதிலிருந்து 15 ஆயிரத்து 613 குழந்தைகள் கொல்லப்பட்டது மற்றும் 33ஆயிரத்து 900 குழந்தைகள் காயப்படுத்தப்பட்டுள்ளது பற்றிய பாலஸ்தீனிய நல அமைச்சகத்தின் கூற்றை சுட்டிக்காட்டிய அருள்பணி பால்த்தாஸ், ஏறக்குறைய 20ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதில் இத்தாலி நாடு பெரிய அளவில் உதவி வருவதாக தன் மகிழ்ச்சியை வெளியிட்ட புனித பூமி பொறுப்பாளர், உதவி தேவைப்படும் காசா பகுதியில் நிவாரண உதவிகள் தடைச் செய்யப்பட்டிருப்பது குறித்த கவலையையும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மார்ச் 2025, 15:10