MAP

கடல் சீற்றம் கடல் சீற்றம் 

ஆசிய சுற்றுச்சூழல் நெருக்கடி குறித்து தலத்திருஅவை கவலை

இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, மலேசியா, மியான்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் மழைக் காடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளன. பழங்குடியின மக்கள் இடம்பெயர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சந்தித்துவரும் ஆசியாவில் வருங்காலத் தலைமுறையினரை மனதில் கொண்டவர்களாக இவ்வுலகைக் காப்பாற்ற ஆசிய தலத்திருஅவை முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இந்திய கர்தினால் Filipe Neri Ferrao.

FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Ferrao அவர்கள் ஆசிய ஆயர் பேரவைகளுக்கு விடுத்துள்ள அழைப்பில், வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளை மனதில்கொண்டு, மனவுறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா முழுவதும் மனிதனின் பாராமுகம், அத்துமீறல், சுரண்டல் போன்றவைகளால் இறைவனின் படைப்பு வேதனையுறுவதைக் காணமுடிகிறது என உரைக்கும் கர்தினால் பெராவோ அவர்கள்,  மனிதனின் இயற்கை குறித்த அக்கறையற்ற நிலைகளின் விளைவுகளை நேரடியாக காணமுடிவது மட்டுமல்ல, அறிவியல் சான்றுகளும் உள்ளன என கூறியுள்ளார்.

இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, மலேசியா, மியான்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் மழைக் காடுகள் அழிவுக்குள்ளாகிவருவது மற்றும் பழங்குடியின மக்கள் இடம்பெயர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது போன்றவைகளையும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால்.

கடல் மட்டம் உயர்வு, கடற்கரை மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்தல், நீர் பாதுகாப்பு, காற்று மாசுக்கேடு, தட்பவெப்ப நிலை மாற்றங்கள், விவசாய நெருக்கடிகள், உணவு பாதுகாப்பு போன்றவைகளையும் சுட்டிக்காட்டிய கர்தினால், குழந்தைகளையும் முதியோரையும் பெருமளவில் பாதிக்கும் காற்று மாசுக்கேடு குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2025, 13:30