MAP

தனது மாமியார் நகோமியுடன் ரூத்து தனது மாமியார் நகோமியுடன் ரூத்து  

தடம் தந்த தகைமை : கடவுளின் திருவுளம் ரூத்தின் வாழ்வில் நிறைவேறியது!

நாம் எந்தளவுக்கு வேறுபாடுகளைக் கடந்து அனைவருடனும் ஒன்றிணைந்து வாழ்கின்றோமோ, அந்தளவுக்குக் கடவுளுடனும் நாம் ஒன்றித்து வாழ்ந்திட முடியும் என்பது திண்ணம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

‘தடம் தந்த தகைமை’ என்ற தலைப்பில் விவிலியக் கதைகள் அறியும் பகுதியில், கடந்த சில வாரங்களாக ரூத்தின் வாழ்வைப் படித்து மகிழ்ந்தோம். அவரது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் திருவுளம் நிறைவேறியதை அறிந்தோம். அவர் ஒரு வேற்றினத்துப் பெண்ணாக இருந்தபோதும், இஸ்ரயேலின் கடவுளாம் யாவே மீதும், தனது மாமியார் நகோமி மீதும் கொண்ட உண்மையான அன்பினால் அவரது வாழ்வு எப்படி மாற்றம் பெற்றது என்பதையும் பார்த்தோம். அவரிடம் விளங்கிய இத்தகைய மனநிலைதான் அவர் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவிற்கு அவரை உயர்த்தியது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இறைவனின் மீட்புத் திட்டத்தில் கடவுள் வேற்றின மக்களுக்கும் இடமளிக்கிறார் என்ற பேருண்மையும் ரூத்தின் வாழ்வில் வெளிப்படுகிறது. ஆக, கடவுள் மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து எல்லாரையும் தனது அன்பு மக்களாக  ஏற்று அன்பு செய்யக் கூடியவர் என்பதையும் அவரது வாழ்வு நமக்குப் புலப்படுத்துகிறது. அப்படியென்றால், ரூத்தின் வழியில் நாமும் இப்படிப்பட்டதொரு தூய வாழ்க்கையை வாழ்வதற்குக் கடவுளால் அழைக்கப்படுகிறோம். நாம் எந்தளவுக்கு வேறுபாடுகளைக் கடந்து அனைவருடனும் ஒன்றிணைந்து வாழ்கின்றோமோ அந்தளவுக்குக் கடவுளுடனும் நாம் ஒன்றித்து வாழ்ந்திட முடியும் என்பது திண்ணம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2025, 13:17