MAP

அரசர் சவுலின் உடலை அடக்கம் செய்யும் மக்கள் அரசர் சவுலின் உடலை அடக்கம் செய்யும் மக்கள் 

தடம் தந்த தகைமை - அரசர் சவுலுக்காக நோன்பிருந்த மக்கள்

வலிமைமிக்கோர் அனைவரும் புறப்பட்டுச் சென்று சவுலின் பிணத்தையும், அவர் புதல்வர் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்கள் எலும்புகளை அடக்கம் செய்து, ஏழு நாள் நோன்பிருந்தனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பெலிஸ்தியர் மடிந்தோரின் உடைகளை உரிந்துகொள்ள மறுநாள் வந்தபோது, சவுலும், அவர்தம் புதல்வரும் கில்போவா மலையில் கிடப்பதைக் கண்டனர். அவர்தம் உடைகளை உரிந்து, தலையை வெட்டி, போர்க்கலன்களையும் எடுத்துக் கொண்டனர். பின்னர், தம் வழிபாட்டுச் சிலைகளுக்கு முன்னும், மக்களுக்கும் அந்த நற்செய்தியை அறிவிக்குமாறு பெலிஸ்தியர் நாடெங்கும் ஆள்களை அனுப்பி வைத்தனர். அவர்தம் போர்க்கலன்களைத் தங்கள் தெய்வத்தின் கோவிலில் வைத்தனர். அவரது தலையைத் தாகோன் கோவிலில் கட்டித் தொங்க விட்டனர். பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லாம் யாபேசு-கிலயாதுவாழ் மக்கள் அனைவரும் கேள்வியுற்றனர்.

அப்போது அவர்களுள் வலிமைமிக்கோர் அனைவரும் புறப்பட்டுச் சென்று சவுலின் பிணத்தையும், அவர் புதல்வர் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்கள் எலும்புகளை அடக்கம் செய்து, ஏழு நாள் நோன்பிருந்தனர். இவ்வாறு, சவுல் தம் துரோகங்களை முன்னிட்டு மடிந்தார். அவர் ஆண்டவர் கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்குத் துரோகம் செய்தார். மேலும், இறந்தோர் ஆவியிடம் ஆலோசனை கேட்டார்; ஆனால், ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கவில்லை. ஆகையால், ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவர் அரசை ஈசாயின் மகன் தாவிதுக்குக் கொடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மார்ச் 2025, 13:14