தடம் தந்த தகைமை – ஆண்டவரின் இல்லத்தில் பாபிலோன் மன்னன்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத்தூண்களையும், தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், தூபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள். மேலும், வெள்ளியாலான நெருப்புச் சட்டிகளையும் பலிக்கிண்ணங்களையும் மெய்க்காப்பாளர் தலைவன் எடுத்துச்சென்றான்.
சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக்கடல், தள்ளு வண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்துமாளாது. முதல் தூண் உயரம் பதினெட்டு முழம். அதன் உச்சியில் மூன்று முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப் பின்னலும் மாதுளம் பழவடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் தூணும் அவ்வாறே வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது. இவை அனைத்தையும் பாபிலோன் மன்னன் தனது நாட்டிற்கு எடுத்துச் சென்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்