MAP

அரசர் சவுல் அரசர் சவுல் 

தடம் தந்த தகைமை - அரசர் சவுலின் இறப்பு

சவுலுக்கு எதிராய் பெலிஸ்தியர் கடும்போர் புரிந்தனர். வில்வீரர் அவரைக் கண்டு கொண்டதும் அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு போரிட்டனர். இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக புறமுதுகு காட்டி ஓடினர்; கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர். பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வரையும் துரத்திப் பிடித்துச் சவுலின் புதல்வர் யோனத்தான், அபினதாபு, மல்கிசூவா, ஆகியோரை வெட்டி வீழ்த்தினர். சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில்வீரர் அவரைக் கண்டு கொண்டதும் அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர். அப்போது சவுல் தமது போர்க்கலன் சுமப்போனை நோக்கி, “விருத்த சேதனம் அற்ற இவர்கள் என்னை ஏளனம் செய்யாதபடி உன் வாளை உருவி என்னைக் கொன்று விடு” என்றார்.

அவர் தம் போர்கலன் சுமப்போன் மிகவும் அச்சமுற்று “அவ்வாறு செய்யமாட்டேன்” என்றான். எனவே, சவுல் தம் வாளை நட்டுவைத்து அதன்மேல் வீழ்ந்தார். சவுல் இறந்ததை அவர்தம் போர்க்கலன் சுமப்போன் கண்டு அவனும் தன் வாளின்மேல் விழுந்து மடிந்தான். இவ்வாறு, சவுலும் அவர்தம் புதல்வர் மூவரும் மடிந்தனர். அவரோடு அவர் குடும்பம் முழுவதும் அழிந்தது. பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ரயேலர் தங்கள் படை புறமுதுகிட்டு ஓடியதையும், சவுலும் அவர் புதல்வரும் இறந்துபோனதையும் கண்டு, அவர்கள் தங்கள் நகர்களைவிட்டுத் தப்பி ஓடினர். பெலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மார்ச் 2025, 13:07