தடம் தந்த தகைமை – அரசன் யோயாக்கிமின் செயல்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உண்மையாகவே ஆண்டவரின் கட்டளைப்படி மனாசேயின் பாவங்களை முன்னிட்டும், அவன் செய்த எல்லாக் காரியங்களை முன்னிட்டும், அவர் அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிடுமாறு, இவையெல்லாம் யூதாவுக்கு நிகழ்ந்தன. மேலும், அவன் குற்றமற்றவர்களின் குருதியைச் சிந்தியதாலும், எருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதாலும், ஆண்டவர் அவனை மன்னிக்க மறுத்துவிட்டார். யோயாக்கிமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. யோயாக்கிம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான். எகிப்திய மன்னன் மீண்டும் தன் நாட்டை விட்டுப் போருக்கென வெளிவரவில்லை. ஏனெனில், எகிப்திய நதிமுதல் யூப்பரத்தீசு ஆறுவரை எகிப்திய மன்னன் கைவசம் இருந்த அனைத்தையும் பாபிலோனிய மன்னன் கைப்பற்றிக்கொண்டான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்