MAP

விதவையின் காணிக்கை விதவையின் காணிக்கை 

தடம் தந்த தகைமை - மற்ற எல்லாவரையும்விட மிகுதியாக

யூத சமூகம் கைம்பெண்களை வெளிப்படையாக ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் எனச் சொல்லித் தாழ்வாக நடத்தியது. மனிதரால் சிறுமைப்படுத்தப்படுவது கடவுளால் பெருமைப்படுத்தப் படும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாவரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்... ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார், (மாற் 12:43&44) என்றார் இயேசு.

யூத சமூகம் கைம்பெண்களை வெளிப்படையாக ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் எனச் சொல்லித் தாழ்வாக நடத்தியது. இத்தகு மனநிலை கொண்டவர்கள் மத்தியில் காணிக்கைச் செலுத்த வந்த அக்கைம்பெண் இயேசுவால் பாராட்டப் பெற்றார். அதற்குக் காரணங்கள் உள.

*எல்லாரும் தங்களிடம் எஞ்சியதைப் போட இவரோ தன்னிடம் இருந்த எல்லாம் போட்டார்.

*கணவருக்குரிய பொறுப்பு சேர்ந்தாலும், சோர்ந்திடாமல் உழைக்கலாம் என்ற நம்பிக்கை.

*என்னிடம் இவ்வளவுதான், வேறேதும் இல்லையே; என குறை எண்ணாத நிறைமனம்.

*அடுத்த வேளைக்கு என்ன செய்வது? என கவலைக் கொள்ளாாமல் இறைமீதான ஆழ்ந்தப் பற்று.

*அவர் பணத்தைப் போடாமல் தன் மனத்தையே போட்டார்.

*அர்ப்பணத்தின் முழுமையை அங்கே அமைதியாக அரங்கேற்றினார்.

மனிதரால் சிறுமைப்படுத்தப்படுவது கடவுளால் பெருமைப்படுத்தப் படும்.

இறைவா! சமூகத்தால் கைவிடப்பட்ட எவரையும் கைவிடாதிருக்கும் கருணை மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மார்ச் 2025, 13:11