MAP

இயேசுவிடம் வாக்குவாதம் செய்த பரிசேயர் இயேசுவிடம் வாக்குவாதம் செய்த பரிசேயர் 

தடம் தந்த தகைமை – பரிசேயருடைய வெளிவேடம்

எத்தகு கொடிய பாவியையும் மன்னித்து ஏற்கும் மனம் இயேசுவுக்குள் இருந்தது. ஆனால் எல்லாப் பாவமும் செய்துகொண்டு ஏதுமறியாதது போல வேடமிட்டு வாழ்வோரை இயேசு மிகக் கடுமையாகச் சாடினார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் (லூக் 12:1) என்கிறார் இயேசு.

சட்டத்தின்படி ஒழுகுதலே சரியான வாழ்வு, கடவுளுக்கேற்ற வாழ்வு எனும் கருத்தியலைக் கொண்ட பரிசேயர் இயேசுவுக்கு எப்போதும் ஒரு சவாலாக இருந்தனர். மாற்றுச் சிந்தனைகளை மனமேற்காத இவர்கள் இயேசுவின் போதனைகளைத் திரித்துக் கூறுவதிலும், வதந்திகளைப் பரப்புவதிலும், மரபுகளைக் கட்டிக் காப்பதிலும் கருத்தாயிருந்தனர். சொல் வேறு செயல் வேறு என்ற வேரற்ற வாழ்வுக்குள் அடைபட்டிருந்த பரிசேயரின் வெளிவேடம் அச்சமூகம் பெற்ற சாபமாகிப் போனது.

எத்தகு கொடிய பாவியையும் மன்னித்து ஏற்கும் மனம் இயேசுவுக்குள் இருந்தது. ஆனால் எல்லாப் பாவமும் செய்துகொண்டு ஏதுமறியாதது போல வேடமிட்டு வாழ்வோரை இயேசு மிகக் கடுமையாகச் சாடினார். சிறிதளவு புளிப்புமாவு ஒட்டுமொத்த மாவையும் புளிப்பேறச் செய்வதுபோல வேடதாரிகள் முழுச் சமூகத்தையும் சாக்கடையில் தள்ள வல்லவர்கள். எவரிடமிருந்து என்னதான் கேட்டாலும் பகுத்துணர்ந்து வாழ்தலே விழிப்பான வாழ்வு, இறைவனுக்குகந்த வாழ்வு. வெளிவேடம், பழி பாவத்திற்கான வழி.

இறைவா! நீர் உண்மையின் கடவுள். உம் பிள்ளையாகிய நானும் உண்மையின் வழி நடப்பதோடு வெளிவேடமற்ற வாழ்வு தொடர வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2025, 12:55