தடம் தந்த தகைமை : அம்மா, உமது நோயிலிருந்து.....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
18 ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண்ணை நோக்கி, ‘அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்’, (லூக் 13:11&12) என்றார் இயேசு.
இயேசுவின் பெரும்பாலான குணப்படுத்தல்கள் ஓய்வுநாளிலே நிகழ்கின்றன. உழைத்துக் களைத்தவருக்கு ஓய்வுநாள் தேவையானதும் நன்றும் கூட. ஆனால் அந்த ஓய்வுநாளின் பெயரால் நடந்தேறிய பேய்த்தன ஒடுக்குமுறைகள் இயேசுவை ஓயாதிருக்கச் செய்தன. எனவேதான் இயேசு தொழுகைக்கூடம் செல்லும் போதெல்லாம் மாற்றுச் சிந்தனைகளை
விதைப்பதிலும், மாறுபட்ட செயல்களைச் செய்வதிலும் தீவிரம் காட்டினார்.
ஓய்வுநாள் குறித்தச் சட்டங்களின் பெயரால் ஓயாச் சண்டைகள், விசாரணைகள், தீர்ப்புகள், தண்டனைகள். ஓய்வுநாள் எனக்கூறி, கடவுள் நன்மை ஏதும் செய்யாமல் ஓய்வு எடுப்பவரல்லர். ஓய்வுநாளின் நோக்கம், பின்னணி, வரலாறு எல்லாம் வேறு. எனவேதான் 18 ஆண்டுகளாய்த் தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பெண் கேளாமலே இயேசு அவரைத் தம் அருகழைத்து, அன்புமொழி சொல்லி, நலம் ஈகின்றார். சட்டங்கள் கடந்த நேயங்களையே இன்று உலகம் தேடுகின்றது. பணக்காரர்கள் சட்டத்தைச் சாட்டையாக்கி ஏழைகளைத் துன்புறுத்துகின்றனர்.
இறைவா! வாய் திறந்து கேளாத ஏழையரின் தேவைகளை இதயத்தால் உணர்ந்து செயலாக்கும் உள்ளுணர்வைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்