தடம் தந்த தகைமை - என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் என்னிடம் மட்டுமல்ல; என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார், (யோவா 12:44&45) என்கிறார் இயேசு.
நம்பிக்கை என்பது கடவுள் வெளிப்படுத்திய உண்மைகளை ஏற்பதாகும். பழைய ஏற்பாட்டுப் பார்வையில், கடவுளை முழுமையாக நம்புவதிலும், புதிய ஏற்பாட்டுப் பார்வையில், கடவுளிடமிருந்து வந்த இயேசுவை நம்புவதிலும் இறைநம்பிக்கை பார்க்கப்படுகின்றது. தொடக்ககால இஸ்ரயேலர் தங்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடவுளின் குறுக்கீடு உண்டென நம்பினர். அவர் வழங்கிய சட்டங்களை
மீறுவது அவருக்கெதிரான வாழ்வு என நினைத்தனர். காலச் சுழற்சியில் கடவுள் மனிதர் வழியாகவும் செயலாற்றுகிறார், பேசுகிறார் என்பதையும் ஏற்றனர்.
ஆனால் கடவுளின் பெயரால் பலர் பற்பல ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டனர். இதனால் இறைமனிதர் என்று உண்மை சொன்னவர்களைச் சந்தேகக் கண்களால் பார்த்தனர், தண்டித்தனர். இயேசுவின் வாழ்வையும் போதனைகளையும் அந்தப் பார்வையில் புகுத்தி நம்ப மறுத்தனர். உண்மைக்குச் சான்றான அவரது வழிகாட்டுதல்கள் ஒளியாக அன்றி இருளாகப் புனையப்பட்டன. நாம் உண்மையை ஒளியாக்கிப் பயணிக்கையில் ஒரு கோடி பேர் சேர்ந்து இருள் எனச் சொன்னாலும் உண்மை உண்மையே. மன வலிமையற்றவர்கள் சந்தேகமிக்கவர்களாகவும், கோழைகளாகவும் இருப்பர்.
இறைவா! நான் உம்மை நம்புகிறேன் என்பதை ஒளிமயமான எனது வாழ்வால் நீருபிக்க செய்யும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்