MAP

கடவுளுக்குரியதை கடவுளுக்கே வழங்குவோம். கடவுளுக்குரியதை கடவுளுக்கே வழங்குவோம்.  (ANSA)

தடம் தந்த தகைமை - சீசருக்கு உரியவற்றை சீசருக்கும்

ஏழைகளிடமிருந்து வரிகள் பெற்றாலும் அவை அவர்களைச் சேராமல் போனதுபற்றிக் கவலைப்பட்டார் இயேசு. ஏழையரை மறந்த சமூகம் மனிதர்கள் வாழா சுடுகாடு எனலாம். அரண்மனைகள் பெருகியதாலே ஏழ்மை பிறந்தது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.(மத் 22:21)

ஓர் அரசு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வசூலிப்பதே வரி. ஆனால் அது தலைகீழாக்கப்பட்டு விருப்பம்போல் வரி வசூலிக்கும் சூழல் பாலஸ்தீனத்தில் சுழன்றது. சீசர் என்பவர் அரசர். அவரது பெயரால் அவரவர் நிலைக்கேற்ப வரி, விளைச்சல் வரி, வணிக வரி, துறைமுக வரி, ஏற்றுமதி வரி, அரண்மனைப் பாதுகாப்பு வரி, இராணுவ வரி என்பவை ஒருபுறம். அதனோடு குறிப்பிட்ட பகுதிகளில் ஆளுநரால் தலைவரி, நிலவரி, சுங்கவரி, வீட்டுவரி, ஆண்டு வரி, கோயில் வரி, புனித இடப் பாதுகாப்பு வரி, எருசலேம் மதில் சுவர் கட்டுமான வரி என வரிசையாக வேறு வரிகள்.

இந்த வரிகளெல்லாம் அரசுக்காக, ஆள்வோருக்காக நடத்தப்பட்ட வசூல் வேட்டை. ஆனால் அனைத்தும் கடவுளின் பெயரால் கறந்து, பிழிந்து எடுக்கப்பட்டன. இதனால் ‘வரிகொடா இயக்கம்’ உருவாகிப் புரட்சி நடந்தது. இயேசு அதனோடு இணையவில்லை. ஏழைகளிடமிருந்து வரிகள் பெற்றாலும் அவை அவர்களைச் சேராமல் போனதுபற்றிக் கவலைப்பட்டார். எனவே ‘கடவுளுக்கு உரியது’ என இயேசு கோடிட்டுக் காட்டுவது இந்த ஏழையரின் உரிமைகளைத்தான். ஏழையரை மறந்த சமூகம் மனிதர்கள் வாழா சுடுகாடு எனலாம். அரண்மனைகள் பெருகியதாலே ஏழ்மை பிறந்தது.

இறைவா! ஏழையர்க்குரியதைப் பதுக்காமல் பகிரும் பண்பை என்னுள் வளர்த்தருளும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மார்ச் 2025, 13:10