MAP

சிறைபிடிக்கப்பட்ட அரசன் யோயாக்கிம் சிறைபிடிக்கப்பட்ட அரசன் யோயாக்கிம்  

தடம் தந்த தகைமை - யூதாவின் அரசனான யோயாக்கிம்

காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். எனவே, யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடிபணிந்திருந்தான்;

மெரினா ராஜ் - வத்திக்கான்

பார்வோனின் கட்டளைப்படி வெள்ளியையும் பொன்னையும் செலுத்த எண்ணிய யோயாக்கிம் தன் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். அவரவர் நிலைக்கேற்ப, அவன் வெள்ளியும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி, அவற்றைப் பார்வோன் நெக்கோவுக்குச் செலுத்தினான். யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் பதினோர் ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டான். ரூமாவைச் சார்ந்த பெதாயாவின் மகள் செபுதா என்பவளே அவனுடைய தாய். யோயாக்கிம் தன் மூதாதையர் செய்த அனைத்தின்படியே, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

அவனது ஆட்சிக் காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். எனவே, யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடிபணிந்திருந்தான்; பின்பு, மனத்தை மாற்றிக்கொண்டு அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாபு, அம்மோன் ஆகிய மக்களினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன்மீது ஏவிவிட்டார். அவர்தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்கின்படி யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மார்ச் 2025, 13:38