வெஸ்ட் பேங்க் பகுதியின் போர் நிறுத்தம் சிரமங்களை அதிகரித்துள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
6 வாரங்களுக்கு முன்னர் வெஸ்ட் பேங்க் பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து அப்பகுதி கிறிஸ்தவர்களின் துன்பங்கள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் பேங், காசா மற்றும் யெருசலேமின் இளையோர் மேய்ப்புப்பணி பொறுப்பாளரான அருள்பணி Louis Salman உரைக்கையில், நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகள் உருவாக்கப்பட்டும், பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் வெஸ்ட் பேங்க் மக்களின் வாழ்வு மிக சிரமம் நிரம்பியதாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வெஸ்ட் பேங்க் பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்துள்ளதால் மக்கள் ஓர் இடம் விட்டு வேறோரிடம் செல்வது சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்தார் அருள்பணி சால்மன்.
யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகத்தின் உயர் அதிகாரி Sami El-Yousef அவர்கள் தெரிவிக்கையில், ஜெனின் நகரிலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து ஏறக்குறைய 16,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், உதவி கட்டமைப்பு முறைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் எவ்விடம் செல்வது எனத் தெரியாமல் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் மக்களுக்கானக் கட்டுப்பாடுகள் மற்றும் கைவிடப்பட்ட நிலைகளால் கத்தோலிக்க நிறுவனங்கள் அவர்களிடம் நெருங்கி வந்து அவர்களுக்கான உதவிகளைச் மேலும் செய்து வருவதாக தெரிவித்தார் அவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்