திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி 16
மெரினா ராஜ் – வத்திக்கான்
யூபிலி ஆண்டு 2025, எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முக்கியமான பொருளுள்ள ஆண்டாக இருக்கும். ஏனென்றும் முதல் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பொதுச்சங்கமான நிசேயா திருச்சங்கம் கொண்டாடப்பட்டதன் 1700ஆவது ஆண்டினை இந்த யூபிலி ஆண்டில் நாம் சிறப்பிக்கின்றோம். திருத்தூதர்கள் காலம் முதல் திருஅவையில் நிலவிய கோட்பாட்டுப் பிரச்சனைகள், குழப்பங்கள் போன்றவற்றில் ஒழுங்கு முறைகளை மேற்கோள்வதற்காக பல்வேறு அறிஞர்கள், மறைவல்லுநர்கள் ஒன்று கூடினர் என்பதை நினைவுகூரும் ஆண்டாக இந்த யூபிலி ஆண்டு அமைகின்றது. நம்பிக்கையின் ஆரம்பகால நூற்றாண்டுகளில், கிழக்கு மற்றும் மேற்கு கிறிஸ்தவத்தில் கூட்டொருங்கியங்கள் பெருகின. இறைமக்களின் ஒற்றுமையையும் நற்செய்தியின் உண்மையுள்ள அறிவிப்பையும் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவ்வாண்டுகள் வெளிப்படுத்தின. நாம் சிறப்பிக்கும் இந்த யூபிலி ஆண்டு ஒருங்கியக்க வடிவத்திற்கு உறுதியான தன்மையைக் கொடுக்க ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கவேண்டும். திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் அவரவர் தனிவரம், கொள்கை, பணி போன்றவற்றுடன், எதிர்நோக்கின் பல அடையாளங்களின் இணைப்பொறுப்பாளர்களாக, உலகில் கடவுளின் இருப்பிற்கு சான்று பகரவேண்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்