MAP

உரோம் தூய பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்தத் திருத்தொண்டர்கள் குழு உரோம் தூய பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்தத் திருத்தொண்டர்கள் குழு 

நற்செய்தியை எடுத்துச் செல்லும் அடையாளங்கள் திருத்தொண்டர்கள்

திருத்தொண்டர்களுக்கு ஒரு சிறப்பான கடமை உள்ளது, நிரந்தரத் திருத்தொண்டர்களுக்கு என்று குடும்பம், வேலை, சூழல் உள்ளது, அங்கு அவர்கள் சான்றுள்ள வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நிரந்தரத் திருத்தொண்டர்கள் தங்களது வார்த்தைகள், தலத்திருஅவை ஆலயங்களில் ஆற்றும் பணிகள், ஏழைகளுக்குச் செய்யும் உதவிகள் போன்றவற்றின் வழியாக, திருஅவைச் சூழலை மட்டும் வாழவில்லை மாறாக, எதிர்நோக்கின் அடையாளங்களாகவும் நற்செய்தியை எடுத்துச் செல்பவர்களாகவும் இருக்கின்றனர் என்று எடுத்துரைத்தார் ஆயர் அந்திரேயா ரீபா.

பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமை முதல் 23 ஞாயிற்றுக்கிழமை வரை வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திருத்தொண்டர்களுக்கான யூபிலி நாளை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு எடுத்துரைத்தார் Cerveteri மறைமாவட்ட பட்டம் சார் ஆயர் அந்திரேயா ரீபா.

திருத்தொண்டர் பணி என்பது திருத்தூதர்கள் காலத்தில் இருந்தே பேசப்படும் ஓர் ஆரம்பகால, பண்டைய பணி என்றும், வரலாறு முழுவதும் பெரும் புகழ் பெற்ற தருணங்களையும், நீண்ட கால தலத்திருஅவை வாழ்க்கை நிகழ்வுகளையும் கொண்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார் ஆயர் ரீபா.

நற்செய்தி அறிவிப்பில் இருந்து பிறந்த இப்பணியானது, எதிர்நோக்கைத் தனது அடையாளமாகக் கொண்டுள்ளது என்றும்,  நற்செய்தி அறிவிப்பையும் சான்று பகர்வதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஆயர் ரீபா அவர்கள், அருள்பணியாளர்களோடு இணைந்து பணியாற்ற அழைப்பு பெற்ற பணி என்றும் வலியுறுத்தினார்.

திருத்தொண்டர்களுக்கு ஒரு சிறப்பான கடமை உள்ளது என்று தெரிவித்த ஆயர் ரீபா அவர்கள், நிரந்தரத் திருத்தொண்டர்களுக்கு என்று குடும்பம், வேலை, சூழல் உள்ளது, அங்கு அவர்கள் சான்றுள்ள வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றும், கிறிஸ்துவை அடைவதை தங்களது நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 பிப்ரவரி 2025, 13:26