MAP

அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் 

நேர்காணல் – மாதா தொலைக்காட்சியின் எதிர்நோக்கின் அனுபவம்

இல்லந்தோறும் இறையாட்சியைக் கட்டியெழுப்பும் பணியில் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மாதா தொலைக்காட்சியின் எதிர்நோக்கின் அனுபவங்களை இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம்.
நேர்காணல் - அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இல்லந்தோறும் இறையாட்சி என்பதைத் தனது விருதுவாக்காகக் கொண்டு தமிழகத்தில் மிகச்சிறப்புடன் இயங்கி வருவது முதல் கத்தோலிக்க தொலைக்காட்சி என்னும் பெருமைக்குரிய மாதா தொலைக்காட்சி. இல்லந்தோறும் இறையாட்சியைக் கட்டியெழுப்பும் பணியில் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மாதா தொலைக்காட்சியின் எதிர்நோக்கின் அனுபவங்களை இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம்.

மதுரை மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் அவர்கள், ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் இயக்குநராகவும், மாதா தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலராகவும், இயக்குநராகவும் சீரும் சிறப்புடன் பணியாற்றிவரும் அருள்முனைவர் டேவிட் ஆரோக்கியம் அவர்கள், கடந்த சனவரி மாதம் உரோம் வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட தகவல் தொடர்பாளர்களுக்கான யூபிலியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தனது பணி பற்றியக் கருத்துக்களை உலகின் பிற தகவல் தொடர்புப் பணியாளர்களுடன் பகிர்ந்துகொண்ட தந்தை அவர்கள் நமது வத்திக்கான் வானொலி நிலையத்திற்கு வருகைதந்து மாதா தொலைக்காட்சியின் எதிர்நோக்கின் அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டக் கருத்துக்களை இன்றைய நம் நேர்காணலில் நாம் காணலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 பிப்ரவரி 2025, 10:25