நேர்காணல் – கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவார அனுபவம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது இயேசுவின் கனவு, நமது கடமை. எல்லாக் கிறிஸ்தவர்களுமே கிறிஸ்தவ ஒன்றிப்பின் பணியாளர்கள் என்ற அர்ப்பணிப்புடன் நடைபோடும்போது ஒன்றிப்பு நோக்கிய பயணம் எளிதாகும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமானது இந்த யூபிலி ஆண்டிலும், சனவரி 18-ஆம் தேதி முதல் முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. சனவரி 25, வெள்ளிக்கிழமை திருத்தூதர் பவுல் மனமாற்ற திருநாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்த மாலைப்புகழ் வழிபாட்டுடன் நிறைவுக்கு வந்தது.
இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தில் பங்கேற்று தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் திரு ஜேசு விக்டர் வியாகப்ப ராஜா. தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள சீர்திருத்த திருச்சபை ஆயராகப் பணியாற்றி வரும் ஜேசு விக்டர் வியாகப்பராஜா அவர்களை கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வார அனுபவம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்