MAP

அருள்பணி. சகாய பெலிக்ஸ் அருள்பணி. சகாய பெலிக்ஸ்  

நேர்காணல் – ஓவியக்கலை வழியாக எதிர்நோக்கின் திருப்பயணம்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரகலா பார்சாந்த் கலைக்கல்லூரியில் முதுகலையையும், சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியத்தின் வழியாக சிகிச்சை முறை பயிற்சியையும் பயின்றுள்ளார் அருள்தந்தை சகாய பெலிக்ஸ். இயேசுவின் இதயம் எனது ஓவியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற விருதுவாக்குடன் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
நேர்காணல் - அருள்பணி சகாய பெலிக்ஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மறைந்திருக்கும் கடவுளின் மகத்துவத்தை நமது கண்கள் மற்றும் இதயத்தால் உணரவைப்பது கலைஞர்களின் பணி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க, கலை வழியாகப் படைத்த இறைவனின் மகிமையைப் பறைசாற்றுபவர்கள் கலைஞர்கள். அதிலும் குறிப்பாக ஓவியக்கலை வழியாக  எல்லைகளைக் கடந்து, உலகெங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு, வியக்க வைக்கின்றனர். அவ்வகையில் தமிழகத்தின் கத்தோலிக்க ஓவியர், ஓவிய அருள்பணியாளர் என்னும் பெருமைக்குரியவர் அருள்பணி சகாய பெலிக்ஸ். தமிழகத்தின் தேவசகாயம் பிள்ளை மலை என்னுமிடத்தில் பிறந்த தந்தை அவர்கள், ஓவியக்கலையில் மிகவும் ஆர்வம் கொண்டவர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரகலா பார்சாந்த் கலைக்கல்லூரியில் முதுகலையையும், சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியத்தின் வழியாக சிகிச்சை முறை பயிற்சியையும் பயின்றுள்ளார். இயேசுவின் இதயம் எனது ஓவியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற விருதுவாக்குடன் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் வழியாக நலமான சமுதாயத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னோக்கிச் செல்கிறார்.

1000 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து, அவற்றை உலகின் பல பகுதிகளில் அதனைக் காட்சிப்படுத்தியவர். இவரின் ஓவியங்கள், ஆன்மிக நறுமணத்தையும் குணப்படுத்தும் ஒளியையும் பரப்பும், தத்துவ மற்றும் இறையியல் கதிர்களால் சூழப்பட்டவை. "புதிய நற்செய்தி அறிவிப்பு" என்ற தேசிய விருதினைப் பெற்றுள்ள தந்தை அவர்கள், ஓவியக்கலையின் மீதான ஆர்வம் மற்றும் ஈர்ப்பினால் "ஓவிய அருள்பணியாளர்" என்று மக்களால் அழைக்கப்படுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்பணி சகாய பெலிக்ஸ் அவர்கள், ஓவியக்கலை வழியாக எதிர்நோக்கின் திருப்பயணம் பற்றிய கருத்துக்களை இன்றைய நேர்காணலில் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 பிப்ரவரி 2025, 10:25