கலைப் படைப்புக்கள் எதிர்நோக்கின் அடையாளங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கலைப் படைப்புக்கள் கிறிஸ்துவின் அடையாளமாக இருந்தால் அவை எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கும் என்றும், கலை மற்றும் புனித கட்டிடக்கலை உலகில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய இந்த யூபிலி நாள்கள் உதவுகின்றன என்றும் கூறினார் அருள்பணி லோபஸ் அரியாஸ்.
பிப்ரவரி 15, சனிக்கிழமை தொடங்கியிருக்கும் கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகின் விழாவை முன்னிட்டு உரோம் திருச்சிலுவை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலைஞர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருள்பணி லோபஸ் அரியாஸ்.
கலைஞர்களுக்கும் திருஅவைக்கும் இடையிலான உறவு, ஆயிரம் ஆண்டு பழமையானது என்றும், திருஅவையின் நடைமுறையிலிருந்து தொடங்கி வரலாறு முழுவதும் தொடர்ந்த ஒரு கூட்டணி, கலை என்றும் கூறினார் அருள்பணி. லோபஸ் அரியாஸ்
கலைஞர்களுக்கும் திருஅவைக்கும் இடையிலான பயனுள்ள கூட்டணியைப் புதுப்பிக்கவும், மீண்டும் கட்டியெழுப்பவும், முன்னாள் திருத்தந்தை 23ஆம் யோவான், திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் மற்றும் தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன என்றும் குறிப்பிட்டார் அருள்பணி லோபஸ்.
எதிர்நோக்கின் அடையாளங்களாக கலை மற்றும் கட்டிடக்கலை இருப்பதாக எடுத்துரைத்த அருள்பணி லோபஸ் அவர்கள், கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு, அவரே நம் மீட்பர் என்பதை நாம் நன்கறிவோம் என்றும், இந்த ஆழமான நம்பிக்கை கிறிஸ்தவர்களிடத்தில் இருந்தால், கலை மற்றும் கட்டிடக்கலை கிறிஸ்துவின் அடையாளங்களாக நம்பிக்கையின் அடையாளங்களாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
கலை மற்றும் கட்டிடக்கலை இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பை எளிதாக்கினால் அவை கிறிஸ்துவின் அடையாளங்களாக இருக்கும் என்ற திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டினார் அருள்பணி லோபஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்