MAP

நைஜீரியாவில் கடத்தல்கள் தொடர்கின்றன நைஜீரியாவில் கடத்தல்கள் தொடர்கின்றன  (AFP or licensors)

நைஜீரிய தலைநகரில் அருள்பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

அருள்பணி Cornellus அவர்கள் கடத்தப்பட்ட Bwari பகுதி ஏற்கனவே பலர் கடத்தப்பட்ட ஓர் இடமாகும். இங்கிருந்து பல விவசாயிகள் கடத்தப்பட்டு பெரிய அளவில் மீட்புத்தொகை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவிலுள்ள வெரித்தாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர் பிப்ரவரி 6ஆம் தேதி, வியாழக்கிழமையன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த அருள்பணியாளர் சார்ந்திருக்கும் Shendam மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அருள்பணி Cornellus Manzak Damulak என்பவர் சுமா என்ற இடத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார்.

அருள்பணி Cornellus அவர்கள் கடத்தப்பட்ட Bwari பகுதி ஏற்கனவே பலர் கடத்தப்பட்ட ஓர் இடமாகும். இங்கிருந்து பல விவசாயிகள் கடத்தப்பட்டு பெரிய அளவில் மீட்புத்தொகை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 பிப்ரவரி 2025, 15:31