MAP

அரசர் யோசியா அரசர் யோசியா 

தடம் தந்த தகைமை - திருச்சட்ட நூல் கண்டெடுக்கப்படல்

அரசர் யோசியா ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லா வழிகளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும் நடந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு. அவர் முப்பத்தோராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார். பொட்சத்தைச் சார்ந்த அதாயாவின் மகள் எதிதா என்பவரே அவருடைய தாய். அவர் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லா வழிகளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும் நடந்தார். தமது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அரசர் யோசியா, மெசுல்லாமின் புதல்வன் அட்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனை ஆண்டவரின் இல்லத்துக்கு அனுப்பிக் கூறியது: “நீ தலைமைக் குரு இல்க்கியாவிடம் சென்று, ஆண்டவரின் இல்லத்திற்கென மக்களிடமிருந்து வாயிற் காப்போர் பெற்றுக்கொண்ட எல்லாப் பணத்தையும் மொத்தக் கணக்கெடுக்கச் சொல். அவர்கள் அப்பணத்தை ஆண்டவரின் இல்லத்தில் பழுது பார்க்க நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரின் கையில் ஒப்புவிக்கட்டும். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்க்கும் வேலைக்காரர்களுக்குக் கொடுக்கட்டும். அதாவது தச்சர்கள், கொத்தர்கள், கட்டடச் சிற்பிகளுக்குக் கொடுக்கட்டும். பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். ஏனெனில், அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்.” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 பிப்ரவரி 2025, 08:00