MAP

எருசலேமில் கொண்டாடப்பட்ட ஆண்டவரின் பாஸ்கா எருசலேமில் கொண்டாடப்பட்ட ஆண்டவரின் பாஸ்கா  

தடம் தந்த தகைமை - அரசன் யோசியா செய்த பிற சீர்திருத்தங்கள்

குரு இல்க்கியா ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த நூலில் எழுதப்பட்டிருந்த திருச்சட்டத்தின் சொற்களை நிறைவேற்றும்படி, யூதா நாட்டிலும், எருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும், குலதெய்வங்களையும், சிலைகளையும், அருவருப்புகளையும் யோசியா அகற்றினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

 அரசர் யோசியா மக்கள் எல்லோரையும் பார்த்து, “இவ்வுடன்படிக்கை நூலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.” இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்கிய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை. யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் எருசலேமில் ஆண்டவரின் பாஸ்கா கொண்டாடப்பட்டது.

குரு இல்க்கியா ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த நூலில் எழுதப்பட்டிருந்த திருச்சட்டத்தின் சொற்களை நிறைவேற்றும்படி, யூதா நாட்டிலும், எருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும், குலதெய்வங்களையும், சிலைகளையும், அருவருப்புகளையும் யோசியா அகற்றினார். இவரைப் போல், தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் மோசேயின் சட்ட நூலுக்கேற்ப ஆண்டவர்பால் திரும்பிய அரசர் அவருக்குமுன் இருந்ததில்லை; அவருக்குப்பின் தோன்றியதுமில்லை. எனினும், மனாசே செய்திருந்த அனைத்தையும் முன்னிட்டு யூதாவின் மேல் ஆண்டவர் கடும் சினம் கொண்டிருந்தார்; அதாவது கொடிய சினம் இன்றும் தணியவில்லை. எனவே, ஆண்டவர், “நான் இஸ்ரயேலைப் போல் யூதாவையும் என் திருமுன்னின்று தள்ளிவிடுவேன். நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரையும் ‘எனது பெயர் இங்கு விளங்கும்’ என்று நான் கூறின கோவிலையும் உதறித் தள்ளுவேன்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 பிப்ரவரி 2025, 14:05