MAP

இறைவார்த்தைக்கு செவிசாய்க்கும் மக்கள் இறைவார்த்தைக்கு செவிசாய்க்கும் மக்கள் 

தடம் தந்த தகைமை – தொழுகை மேடுகளை ஒழித்த அரசன் யோசியா

அரசர் யோசியா சிலைத்தூண்களையும், அசேராக் கம்பங்களையும் வெட்டி வீழ்த்தி, அவ்விடங்களை மனித எலும்புகளால் நிரப்பினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அவர் யூதா நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் எருசலேமுக்கு அழைத்துக் கொண்டார். மேலும், அவர் கேபா முதல் பெயேர்செபாவரை அர்ச்சகர்கள் தூபம் காட்டிவந்த எல்லாத் தொழுகை மேடுகளையும் மாசுபடுத்தினார். நகர வாயிலின் இடப்புறம், நகரின் ஆளுநனான யோசுவா நுழைவாயிலின் முகப்பில் எழுப்பியிருந்த தொழுகை மேடுகளையும் இடித்துத் தள்ளினார். ஆயினும், தொழுகை மேடுகளின் அர்ச்சகர்கள் எருசலேமில் இருந்த ஆண்டவரது பலிபீடத்தை நெருங்காமல் தங்கள் சகோதரர்களோடு புளியாத அப்பங்களை உண்டு வந்தனர்.

மேலும், மோலெக்கு சிலைக்கு எவனும் தன் மகனையோ மகளையோ பலியாக்காதவாறு, பென்இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கும் தொப்பேத்தையும் மாசுபடுத்தினார். அவர், ஆண்டவரின் இல்லத்தின் வாயிலருகில் இருந்த நாத்தான்மெலேக்கு என்ற மேற்பார்வையாளன் அறையை அடுத்து, யூதா அரசர்களால் கதிரவனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைச் சிலைகளையும் அகற்றினார். கதிரவனின் தேர்களையோ நெருப்பில் சுட்டெரித்தார். மேலும், யூதா அரசர்களால் ஆகாசின் மாடியறை மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், ஆண்டவரின் இல்லத்தின் இரண்டு முற்றங்களிலும் மனாசேயால் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும், அரசர் இடித்துத் தூளாக்கி அந்த இடிப்பாட்டைப் கிதரோன் நீரோடையில் கொட்டினார். எருசலேமுக்குக் கிழக்கே, அழிவின் மலைக்குத் தெற்கே இருந்த தொழுகை மேடுகளை அவர் மாசுபடுத்தினார். இவை, சீதோனியரின் அருவருப்பான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் இழிபொருளான மில்க்கோமுக்கும் இஸ்ரயேலின் அரசர் சாலமோனால் கட்டப்பட்டவை. மேலும், அவர் சிலைத்தூண்களையும், அசேராக் கம்பங்களையும் வெட்டி வீழ்த்தி, அவ்விடங்களை மனித எலும்புகளால் நிரப்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 பிப்ரவரி 2025, 14:18