MAP

உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் வாசித்த மக்கள் உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் வாசித்த மக்கள் 

தடம் தந்த தகைமை - வேற்றுத் தெய்வ வழிபாட்டை ஒழித்த அரசன் யோசியா

எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்                    

அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர். அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார். அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும் அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.

அப்பொழுது அரசர் பாகாலுக்காகவும் அசேராவுக்காகவும் வானத்தின் படைத்திரள் அனைத்துக்காகவும் பயன்படுத்திய எல்லாக் கலன்களையும், தூயகத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி தலைமைக் குரு இல்க்கியாவுக்கும் துணைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டார். அவர் அவற்றை எருசலேமுக்கு வெளியே கிதரோன் வெளிகளில் சுட்டெரித்து, சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டு சென்றார். அத்தோடு, யூதாவின் நகர்களிலும் எருசலேமைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த தொழுகை மேடுகளில் தூபம் காட்டுமாறு யூதா அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர்களை நீக்கினார். மேலும் பாகால், கதிரவன், நிலா, விண்மீன்கள், வானத்துப் படைத்திரள் அனைத்திற்கும் தூபம் காட்டியவர்களையும் நீக்கினார். ஆண்டவரின் இல்லத்திலிருந்து அசேராவை அகற்றி எருசலேமுக்கு வெளியே உள்ள கிதரோன் நீரோடைக்குக் கொண்டு சென்றார். அங்கே அதைச் சுட்டெரித்துத் தூளாக்கி அத்தூளைப் பொது மக்களின் கல்லறைகளின்மேல் தூவுமாறு பணித்தார். மேலும், ஆண்டவரின் இல்லத்திலிருந்த விலைஆடவரின் விடுதிகளையும், அசேராவுக்குத் தேவையான துணிகளை நெய்த பெண்களின் விடுதிகளையும் இடித்துத் தள்ளினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2025, 14:16