MAP

இறைவனின் இறுதி தீர்ப்பு நாள் இறைவனின் இறுதி தீர்ப்பு நாள்  (©Renáta Sedmáková - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய்

வாழ்வு ஓர் ஆசி. கடவுளிடமிருந்து நாம் வாழ்வைப் பெறுகிறோம் என்பது அவரது ஆசியைப் பெறுவதாகும். எனவே ஆசிகளுக்கெல்லாம் ஊற்றாக இருப்பவர் கடவுள்தாம் என்பதே இயேசுவின் நல்லெண்ணம்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார், (யோவா 5:26) என்றார் இயேசு.

“உயிர்வாழும் கடவுள்” என விவிலியத்தின் பல பக்கங்களில் வருணிக்கப்படுபவர் நம் வானகத் தந்தை. பழைய ஏற்பாடு 'வாழ்வு' என்று இருத்தலைக் குறிப்பிடுகின்றது. அது வாழும் காலத்தைச் சுட்டுவது. அந்த வாழ்வு ஓர் ஆசி. கடவுளிடமிருந்து நாம் வாழ்வைப் பெறுகிறோம் என்பது அவரது ஆசியைப் பெறுவதாகும். எனவே ஆசிகளுக்கெல்லாம் ஊற்றாக இருப்பவர் கடவுள்தாம் என்பதே இயேசுவின் நல்லெண்ணம்.

அவ்வாறு நாம் பெற்ற வாழ்வு நமக்கானது அல்ல. நம் சுய தேவைகளையும், தேடல்களையும் மட்டும் நிறைவேற்றத் துணிந்தால் அது வாழ்வைப் பதுக்குவதாகும். வாழ்வு பகிரவே. வாழ்வில் பெறும் ஒவ்வொரு நாளையும் நேரத்தையும் ஆக்கப்பூர்வமாக உருமாற்றுகையில் தந்தைக் கடவுளின் ஆசியை நாம் பகிர்கிறோம் என்றே பொருள். தந்தையைப் போலவே மகனும் “ஆடுகள் வாழ்வை நிறைவாக பெறும் பொருட்டு....” (யோவா 10:10) எனச் சொல்வதால் இயேசுவும் வாழ்வின் ஊற்றே. அந்த ஊற்றிலிருந்துப் பருகும் நாமெல்லாம் வாழ்வளிக்கப் பிறந்தவர்கள். நீண்ட ஆண்டுகள் வாழ்வதினும் ஒவ்வொரு நொடியையும் உணர்ந்து வாழ்வதே நல்வாழ்க்கை.

இறைவா! அற்புதமான வாழ்வின் இரகசியத்தைப் புரிந்து அர்ப்பணத்தோடு வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 பிப்ரவரி 2025, 12:55