MAP

தொழுநோயாளரைத் தொட்டுக் குணமாக்கிய இயேசு தொழுநோயாளரைத் தொட்டுக் குணமாக்கிய இயேசு 

தடம் தந்த தகைமை : நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக

தம்மை அணுகுபவரது நம்பிக்கையை வைத்தே நலம் கொடுக்கும் யுக்தியை இயேசு கையாண்டு வந்தார். நல்லுணர்வும் நம்பிக்கையுமே நலம் பெறும் வழிகள் என மொழியவும் செய்தார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும். இயேசு : நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக. (மத் 8:2&3)

தொழுநோய் தொற்றுநோய் என்றும் அது தீட்டானதென்றும் கடவுளின் சாபமென்றும் கருதப்பட்டக் காலச் சூழலிலே இயேசு வாழ்ந்தார். தொழுநோயாளர் எவரும் தம் ஊருக்குள் இருத்தலாகாது என்ற சட்டமும் உண்டு. தொழுநோயாளர் ஒருவர் ஊருக்குப் புறம்பே வாழ்ந்தாலும் யாரேனும் தன்னருகே வருவதாகத் தெரிந்தால் “தீட்டு… தீட்டு” எனக் கத்தி ஒதுங்கியோட வேண்டும். இப்படிப்பட்ட கொடுஞ்சட்டங்களையெல்லாம் கடந்து நம்பிக்கையோடு இயேசுவை அணுகிய அத்தொழுநோயாளர் நம் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர்.

தம்மை அணுகுபவரது நம்பிக்கையை வைத்தே நலம் கொடுக்கும் யுக்தியை இயேசு கையாண்டு வந்தார். நல்லுணர்வும் நம்பிக்கையுமே நலம் பெறும் வழிகள் என மொழியவும் செய்தார். எந்த நோயாளரும் தானே விரும்பி ஒரு நோயை ஏற்பதில்லை. நோய் வந்ததால் அவர் அனுபவிக்கும் துன்பத்தைவிட நோயாளர்க்கான சட்டங்களால் அனுபவிக்கும் துயரமே மிகக் கொடியதாக இருந்தது. எனவேதான், 'நீர் விரும்பினால்' என்ற கெஞ்சலுக்கு 'நான் விரும்புகிறேன்” எனக் கொஞ்சலாகப் பதில் ஈந்து நலமும் வழங்குகின்றார் இயேசு. மன உறுதியுள்ள மனிதர் தனக்கு ஏற்றபடி உலகை வளைத்துக்

கொள்கிறார்.

இறைவா! எவரையும் ஒருபோதும் வெறுக்காத பரிவுணர்வை எனக்குப் பரிசாய் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 பிப்ரவரி 2025, 09:28