பஹாசா மொழியில் புதிய நற்செய்தி வலைத்தளம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்திகளைப் புரிந்துகொள்வதற்கும், வாழ்வதற்கும், பரப்புவதற்கும் ஓர் ஆழமான பயணத்தின் தொடக்கத்தை, புதிய நற்செய்தி வலைத்தளம் எடுத்துரைக்கின்றது என்றும், வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த மக்களுடன் உறுதியான உடன்பிறந்த உறவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவம், பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்தல், சமூக நீதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார் அருள்தந்தை Yustinus Sulistiadi.
பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் ஜகார்த்தா மறைமாவட்டத்த்தில் பஹாசா மொழியில் யூபிலி ஆண்டை முன்னிட்டு “கபர் பைக்” எனப்படும் நற்செய்தி வலைதளம் தொடங்கப்பட்டுள்ளதாக பீதேஸ் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார் அருள்தந்தை Yustinus Sulistiadi.
இந்தோனேசிய தலைநகரின் வடக்குப் பகுதியில் உள்ள பந்தாய் இந்தா கபுக் தோட்டத்தில் உள்ள “அகிதா அன்னையின் செபத் தோட்டம்” என்ற இடத்திற்கு மேற்கொண்ட சிறப்பு திருப்பயணத்தின்போது புதிய நற்செய்தி வலைதளத்திற்கான முயற்சி வெளியிடப்பட்டது என்றும், 2023 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட "அகிதா அன்னையின் செபத் தோட்டம்", இந்தோனேசியா முழுவதும் செபம் மற்றும் ஆன்ம ஆய்விற்கான இடத்தைத் தேடிச் செல்லும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலமாக விரைவில் மாறியது என்றும் எடுத்துரைத்தார்.
வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த மக்களுடன் உறுதியான உடன்பிறந்த உறவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவம், பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்தல், சமூக நீதியை மேம்படுத்துதல், திருஅவை சமூகத்தில் மனித மாண்பு, சமத்துவம்,நீதி ஆகியவற்றை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த புதிய வலைத்தளம் முக்கிய பங்காற்றுகின்றது என்றும் எடுத்துரைத்தார் அருள்தந்தை Sulistiadi.
மறைமாவட்டத்தின் பல்வேறு தலத்திருஅவைகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட இறைமக்கள் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு "கபார் பைக் தளத்தின்" விளம்பரதாரர் தலைமை தாங்கினர் என்றும், கத்தோலிக்க சமூகம் தங்கள் நம்பிக்கையைப் பற்றி சிந்திக்கவும், யூபிலி ஆண்டில் முன்மொழியப்பட்ட புதுப்பித்தல் மற்றும் மனமாற்ற உணர்வைத் தழுவுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது என்றும் கூறினார் அருள்தந்தை Sulistiadi.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்