MAP

நைஜீரிய அருள்சகோதரிகள் நைஜீரிய அருள்சகோதரிகள் 

தென்கிழக்கு நைஜீரியாவில் இரண்டு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டனர்!

கடத்தப்பட்ட இரண்டு அருள்சகோதரிகளையும் கண்டுபிடித்து மீட்பதற்காகக் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள அமல உற்பவ அன்னை சபையைச் சேர்ந்த இரண்டு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சகோதரி Vincentia Maria Nwankwo மற்றும் சகோதரி Grace Mariette Okoli இருவரும் ஜனவரி 7, இச்செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்டனர் என்றும், அவர்களது சபையின் அறிக்கையின்படி, ஓக்போஜியில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அவர்களை உஃபுமா சாலையில் ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் உரைக்கின்றது.

அருள்சகோதரி வின்செந்தியா மரியா, உஃபுமாவில் உள்ள பேராயர் சார்லஸ் ஹீரி நினைவு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முதல்வராகவும், அருள்சகோதரி கிரேஸ் மரியத் நேவியிலுள்ள அமல உற்பவ அன்னை பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு அருள்சகோதரிகளையும் கண்டுபிடித்து மீட்பதற்காக கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்ததாகவும் குறிப்பிடுகின்றது அச்செய்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜனவரி 2025, 11:17