MAP

நைஜீரிய அருள்சகோதரிகள் நைஜீரிய அருள்சகோதரிகள்  (Vatican Media)

ஒருங்கிணைந்த பயண உணர்வினால் பலனளிக்கும் வழிகாட்டுதல்கள்

சமூக வாழ்க்கையில் அனைவருக்கும் உதவியாக உள்ளது, ஒருவருக்கொருவர் மற்றும் ஒருவரின் சொந்த இதயத்தைக் கேட்கவும், அத்தகைய அனுபவங்களின் பலன்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருங்கிணைந்த பயண அணுகுமுறை வாய்ப்பளிக்கின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

நைஜீரியாவின் கத்தோலிக்கப் பள்ளிகளில் உள்ள இளம் பெண்களின் உருவாக்கத்தில்  ஒருங்கிணைந்த பயண உணர்வு பலனளிக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது என்றும், நேர்மை, திறந்த மனம், தன்னம்பிக்கை, ஒழுக்கமான ஆகியவை கொண்ட பெண்களாக, வாழ்க்கையில் தங்கள் இலக்குகளை அடையத் தயாராக இருக்க உதவியுள்ளது என்றும் கூறினார் அருள்சகோதரி ஜஸ்டின் அடேஜோ.

இறைஇரக்க இயேசுவின் அகுஸ்தினார் சபை அருள்சகோதரியான ஜஸ்டின் அடேஜோ அவர்கள், ஒருங்கிணைந்த பயணத்தினால் தங்களது பள்ளி மாணவிகள் அடைந்த பலன்கள் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு கூறினார்.

மாணவிகளின் குரலுக்கு செவிசாத்தல் அவர்களுடன் தொடர்பு கொள்ள அதிக வாய்ப்பை அளித்தது என்றும், எளிய அணுகுமுறை வழியாக அருகிருப்பை வெளிப்படுத்தும்போதும், அவர்கள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும் போதும் தங்களது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை மாணவிகள் பகிர முன்வந்தார்கள் என்றும் எடுத்துரைத்தார் அருள்சகோதரி அடேஜோ.

ஒருங்கிணைந்த பயண அணுகுமுறை மாணவிகளை நேர்மையானவர்களாகவும், திறந்த மனம் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், ஒழுக்கமான பெண்களாக, வாழ்க்கையில் தங்கள் இலக்குகளை அடையத் தயாராக இருக்கும் பெண்காளாக மாற உதவியுள்ளது என்று கூறிய அருள்சகோதரி அடேஜோ அவர்கள், பள்ளியில் இருக்கும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை அமைப்பு மாணவர்களை நன்முறையில் மாற்றுகின்றது என்றும் கூறினார்.

கிறிஸ்துவை மாணவர்களிடம் எடுத்துச் செல்வதும், அவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவதையும் தங்களது பணியாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக எடுத்துரைத்த அருள்சகோதரி அடேஜோ அவர்கள், சமூக வாழ்க்கையில் அனைவருக்கும் உதவியாக ஒருவருக்கொருவர் இதயத்திற்கு செவிசாய்க்கவும், அனுபவங்களின் பலன்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜனவரி 2025, 12:12