MAP

துன்புறும் காசா சிறார் துன்புறும் காசா சிறார் 

காசாவில் தொடரும் குழந்தைகள் இறப்பு விகிதம்

காசா சுகாதார அமைச்சகத்தின் ஜனவரி 1 ஆம் நாள் அறிக்கையானது 48 மணி நேரத்தில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், ஜனவரி 1 ஆம் நாள் அறிக்கையானது 24 மணி நேறத்தில் ஏறக்குறைய 71 பேர் கொல்லப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடந்த 15 மாதங்களாகக் காசாவில் உள்ள குழந்தைகள் குண்டுவீச்சுக்களுக்கு ஆளாகின்றனர் என்றும், மிகவும் கொடுமையான சூழலிலும் பசி மற்றும் பட்டினியால் வாடித் துன்புற்று தங்களது வீடுகளை இழந்து வாடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் சேவ் த சில் ரன் என்னும் குழந்தைகள் நல அமைப்பின் மனிதாபிமான கொள்கைக்காக வாதாடும் உலகளாவிய தலைவர் அலெக்சாந்த்ரா சாயிஹ்.

ஜனவரி 4 சனிக்கிழமை புதிய ஆண்டு தொடங்கிய சில நாள்களில் காசா பகுதியில் துன்புறும் சிறார் பற்றிய கணக்கெடுப்பை எடுத்துரைத்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ள  அலெக்சாந்த்ரா அவர்கள், மிகவும் குளிர் நிறைந்த இக்காலகட்டத்தில் பெரியவர்களை விட சிறார்கள் அதிகமாகத் துன்புறுகின்றனர் என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து வாடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட 80 பேரில் 38 பேர் சிறார் என்றும், குளிர்போக்கும் உடைகள், போர்வைகள், படுக்கைகள் போன்றவற்றை எடுத்துச்செல்வதை இஸ்ரயேலிய அதிகாரிகள் தடுத்துள்ளதால் குளிரினாலும் குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அலெக்சாந்த்ரா.

15 மாதங்களாக குழந்தைகள் குண்டுவீச்சுக்கு ஆளாகி, பட்டினியால் வாடி, தொடர்ந்து வீடுகளை விட்டுத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், இடைவிடாத போரின் தாக்கங்களுக்கு அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள், அதிலும் தற்போது உறைபனி வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் அலெக்சாந்த்ரா.

அதிகமான குளிரினால் வாடும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியானது பலவீனப்படுத்தப்படுகின்றது என்றும், ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்களினால் அதிக ஆபத்தில் உள்ள குழந்தைகளுக்கு, மிகவும் குளிர்ந்த வெப்பநிலை ஓர் ஆபத்தான சூழலை ஏற்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளார் அலெக்சாந்த்ரா.

காசா சுகாதார அமைச்சகத்தின் ஜனவரி 1 ஆம் நாள் அறிக்கையானது 48 மணி நேரத்தில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், ஜனவரி 1 ஆம் நாள் அறிக்கையானது 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 71 பேர் கொல்லப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அலெக்சாந்த்ரா அவர்கள், பாலஸ்தீனிய மத்திய புள்ளியியல் அலுவலகத்தின்படி, காசாவின் மக்கள் தொகையில் 47 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜனவரி 2025, 15:45