உணவின் மாண்பினை மதிக்க வேண்டும் கர்தினால் Stephen Chow
மெரினா ராஜ் - வத்திக்கான்
கலாச்சார மாற்றம், வெற்றிக் கொண்டாட்டங்கள், சாதனைகள், விழாக்கள், மகிழ்வான தருணங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படும் உணவு விருந்துகளில் ஏராளமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன என்றும், நமது வாழ்வை மதித்தல், நாம் வாழும் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்தல் என்னும் நமது கடமையை உணவின் மாண்பினை மதித்தல் என்பதை வலியுறுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Stephen Chow, S.J.
ஜனவரி 3 வெள்ளிக்கிழமை, ஹாங்காங் மறைமாவட்ட ஞாயிறு கத்தோலிக்க சிந்தனை என்னும் வலைதளத்தில் உணவின் மாண்பு என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் ஹாங்காங் மறைமாவட்ட இயேசு சபை அருள்பணியாளரான கர்தினால் ஸ்டீஃபன் சோ.
இவ்வுலகில் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் கடவுளின் அன்பான கருணையால், உருவாக்கப்பட்டவை என்றும், கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் அவரால் படைக்கப்பட்ட படைப்பை நன்கு கவனித்துக் கொள்வதற்காகக் கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Stephen Chow, S.J.
அனைத்து உரிமைகளும் மாண்பும் கடவுளின் கொடை என்ற எண்ணத்தில் பார்க்கப்பட வேண்டும், அதற்கு முரணாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் சோ அவர்கள், நமது தனிமனித உரிமைகளில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால், அது மற்றவர்களின் உரிமைகளை மட்டுமன்றி அவர்களின் அடிப்படை மாண்பையும், குறிப்பாக பலவீனமானவர்களின் உரிமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும், இத்தகைய வருந்தத்தக்க விளைவுகள் படைப்பில் கடவுளின் அன்பான நோக்கத்தை மீறுவதாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அண்மையில் இரண்டு பெரிய விருந்துகளில் பங்கேற்றபோது ஏராளமான உணவுகள் வீணாவதைப் பார்த்து வருத்தம் அடைந்ததாக எடுத்துரைத்த கர்தினால் சோ அவர்கள், பரிமாறப்பட்ட உணவுகள் உண்ணாமல் வீணடிக்கப்படுவது நிராகரிக்கப்படுவது உணவின் மாண்பினை பாதிக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
மற்ற உயிர்களின் மாண்பை நாம் புறக்கணிக்கும்போது, நிலைத்தன்மை உடையதாகிவிட்ட உலகளாவிய சமூகத்தின் மீது காயத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறோம் என்றும், மனிதரல்லாத வாழ்க்கை மற்றும் மனிதர்களுக்கான உணவு என்ற எண்ணம் உடனடியாக நிராகரிக்கக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் சோ.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டில் இருக்கும் நாம் பிறர் வாழ்வில் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் வழங்குபவர்களாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் உணவு வீணாக்கப்படாமல் மாண்புடன் மதிக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
வாழ்க்கையின் மீதான நமது மரியாதையும், நீதியும், அன்பும் பலவீனமடையும் என்றும், இருப்பவர்கள் – இல்லாதவர்கள் ஆகியோருக்கு இடையே, மனித இனத்திற்கும் கடவுளின் பிற படைப்புகளுக்கும் இடையே பிரச்சனையில் உள்ள உறவுகளை உணவு வீணாக்கப்படுதல் மேலும் சேதப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Stephen Chow, S.J.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்