புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொள்ள கர்தினால் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
புனித பூமியின் திருத்தலங்களுக்கு பயணிகள் மீண்டும் வரத்துவங்குவது, அகில உலகத் திருவையின் அங்கத்தினர்கள் என்ற உணர்வை அங்குள்ள மக்களுக்கு வழங்கும் என குறிப்பிட்டார் கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா.
யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பிட்சபாலா அவர்கள், யெருசலேமிலும் இயேசு வாழ்ந்த இடங்களிலும் மீண்டும் திருப்பயணிகள் வரத்துவங்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்ததோடு, போர் நிறுத்தம் நல்ல ஒரு திருப்புமுனையாக இருந்தது மட்டுமல்ல, புனித பூமியின் வாழ்வில் இது குறிப்பிடப்பட வேண்டியது என்றார்.
கடந்த ஆண்டு யெருசலேம் திருஅவைக்கு ஒரு கடினமான ஆண்டாக இருந்ததாக எடுத்துரைத்த கர்தினால், அகில உலக திருஅவையின் ஆதரவு, ஜெபம், ஒன்றிப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு நன்றி சொல்ல விரும்புவதாகவும் கூறினார்.
போர் நிறுத்தம் இடம்பெற்றுவருவதால் புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொள்வது குறித்து மக்கள் திட்டமிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் கர்தினால் பிட்சபாலா.
கர்தினால் பிட்சபாலாவோடு இணைந்து இந்த அழைப்பை விடுத்த புனித பூமிக்கான கத்தோலிக்க திருஅவையின் பொறுப்பாளர் அருள்பணி Francesco Patton அவர்கள், புனித பூமி கிறிஸ்தவர்கள் வெளிநாட்டுத் திருப்பயணிகளுக்காகக் காத்திருக்கிறார்கள் எனவும், இங்கு அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்