எத்தியோப்பியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருஅவையின் பணிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
எத்தியோப்பியாவின் Tigray பகுதியில் இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்ற போரின் விளைவுகளான வன்முறை, குடிபெயர்வுகள் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குணப்படுத்தும் பணிகளைத் துவக்கியுள்ளது தலத்திருஅவை.
இரண்டு ஆண்டுகளான எத்தியோப்பிய Tigray பகுதி போரால் அனைத்து மக்களும் பெரும் திகிலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் எனற Adigrat பகுதியின் ஆயர் Abune Tesfaselassie Medhin அவர்கள், தானும் ஆயுதம் தாங்கியவர்களால் பேராலயத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அருள்பணியாளர்களின் உதவியால் உயிர்தப்பியதாகத் தெரிவித்தார்.
இரண்டாண்டு போருக்கு முன்னர், அனைத்துமக்களும் வேறு வேறு பின்னணியில் இருந்து வந்தாலும் எவ்வித வன்முறைகளும் இன்றி அமைதியில் வாழ்ந்ததைக் காண முடிந்தது எனவும் கூறினார் ஆயர்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘திக்ரே மக்கள் விடுதலை முன்னணி’ என்ற குழுவுக்கும் ‘எத்தியோப்பிய தேசிய பாதுகாப்பு படை’க்கும் இடையே எழுந்த மோதலில், 2021ஆம் ஆண்டின் மத்தியில் ஏறக்குறைய 52 இலட்சம் மக்களுக்கு உணவு உதவிகள் தேவைப்பட்டன.
2022ஆம் ஆண்டு போர்நிறுத்தம் இடம்பெற்றவேளையில் ஏற்கனவே 6 இலட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர், மற்றும் 26 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக மாறியிருந்தனர்.
போர் நிறுத்தம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தபின்னரும் 10 இலட்சம் பேர் குடிபெயர்ந்தவர்களாகவே நாட்டிற்குள் வாழ்ந்துவந்தனர்.
கத்தோலிக்க உதவி நிறுவனங்களின் கூற்றுப்படி, கடந்த ஆண்டின் வறட்சியால் எத்தியோப்பியாவில் 40 இலட்சம் மக்கள் உணவுப்பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்