MAP

தூய பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் தூய பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவின் முன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 10

கடினமான சூழலிலும் உடன் உள்ள நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் என அனைவரையும் நன்கு கவனித்துக் நலவாழ்வுப் பணியாளர்களுக்கு நமது நன்றியினை தெரிவிப்போம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உடல் உள்ள நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தாலும் சரி, மருத்துவமனையில் இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிர்நோக்கின் அடையாளங்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களைச் சந்திக்கும் மக்கள் தங்களது உடனிருப்பு, நெருக்கம் அன்பு வழியாக அவர்களின் துன்பங்களை நீக்க வேண்டும். இரக்கமுள்ள நமது செயல்கள் எதிர்நோக்கின் செயல்களாகும். கடினமான சூழலிலும் உடல் உள்ள நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் என அனைவரையும் நன்கு கவனித்துக் கொள்ளும் நலவாழ்வுப் பணியாளர்களுக்கு நமது நன்றியினை தெரிவிப்போம்.

குறிப்பாக கடினமான வாழ்க்கைச் சூழ்நிலைகளில் தங்களது வாழ்வை வாழ்பவர்கள், தங்களது பலவீனத்தால் துன்புறுபவர்கள், குணப்படுத்த முடியாத நோய்களால் துன்புறுபவர்கள் என அனைவருக்காகவும் செபிப்போம்.  அவர்களை மிகுந்த அக்கறை மற்றும் அன்புடன் கவனித்துக் கொள்வோம். அவர்கள் மீதான நமது கவனம் குறையாமல் இருக்கக் கவனிப்போம். தேவையில் இருப்பவர்கள் அனைவருக்கும் உதவுவது மனித மாண்பின் பாடல் போன்றது. சமுகத்தில் உள்ள அனைத்து மக்களும் இணைந்து பாடும் எதிர்நோக்கின் பாடலாக நமது செயல்கள் இருக்கவேண்டும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜனவரி 2025, 11:44