MAP

 Bruxelles முதியோர் இல்லத்தில் வாழ்பவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) Bruxelles முதியோர் இல்லத்தில் வாழ்பவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்)  (Vatican Media)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 13

நம்பிக்கை மற்றும் ஞானமுள்ள வாழ்க்கையினை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கொண்டுசெல்வதில் முன்னிலையில் இருக்கின்றார்கள் தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எதிர்நோக்கின் அடையாளங்கள், அவர்கள் பெரும்பாலும் தனிமையையும் கைவிடப்பட்ட உணர்வையும் அனுபவிக்கின்ற முதியோர்களுக்கு உரியவை. தங்களது வாழ்க்கை அனுபவங்கள், மற்றும் ஞானத்தை புதையல்களாக சுமந்து வாழ்கின்றார்கள் முதியோர். இத்தகைய அவர்களது மதிப்புள்ள பங்களிப்பானது சமூக மற்றும் கிறிஸ்தவ வாழ்விற்கு உறுதியை அளிக்கின்றன. முதியோர்கள் தலைமுறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பிற்காக ஒன்றிணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டவர்கள் அவர்கள்.

நம்பிக்கை மற்றும் ஞானமுள்ள வாழ்க்கையினை இளைய தலைமுறையினருக்குக் கொண்டுசெல்வதில் முன்னிலையில் இருக்கின்றார்கள் தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள். இத்தகைய தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள் அனைவரும் தங்களது பிள்ளைகளின் நன்றியுணர்வு மற்றும் பேரக்குழந்தைகளின் அன்பால் நிலைநிறுத்தப்படட்டும். பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும், தாத்தா பாட்டிகளிடம் இருந்து தங்களது  ஆற்றல் பெற்று அடிப்படை வேரில் வேரூன்றப்பட்டு, புரிதல் மற்றும் ஊக்கத்தைப் பெறுகின்றார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜனவரி 2025, 10:04