MAP

உகாண்டா புலம்பெயர்ந்தோர் உகாண்டா புலம்பெயர்ந்தோர்  

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - ஆணைமடல் பகுதி 12

சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது

மெரினா ராஜ் - வத்திக்கான்

தங்களுக்காகவும் தங்கள் குடும்பங்களுக்காகவும் சிறந்த வாழ்க்கையைத் தேடி தங்களது சொந்த நிலத்தைத் தேடி வெளியேறும் புலம்பெயர்ந்தோரிடம் எதிர்நோக்கின் அடையாளங்கள் குறைவுபடாதவாறு அதிகமாகக் காணப்படும். அவர்களது எதிர்பார்ப்புக்கள் தவறான எண்ணங்களாலும் மூடுதல்களாலும் ஒருபோதும் தடைபடக்கூடாது. அனைவரையும் வரவேற்கும் பண்பானது, தனது கரங்களைத் திறந்து  ஒவ்வொருவரையும் அவரவர் மாண்பிற்கேற்ப பொறுப்புடன் வரவேற்க வேண்டும். சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அவர்களின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. போர்கள், வன்முறைகள், பாகுபாடுகள் போன்ற பன்னாட்டு நிகழ்வுகளால் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தோர், போன்றோருக்குப் பாதுகாப்பு, வேலை மற்றும் கல்விக்கான அணுகல் உறுதி செய்யப்பட வேண்டும், சமூக வாழ்வில் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதற்கான அடிப்படை உதவிப்பொருள்களும் கிடைக்கப்பட வேண்டும்.

கிறிஸ்தவ சமூகம் எப்போதும் பலவீனமானவர்களின் உரிமையைப் பாதுகாக்கத் தயாராக இருக்க வேண்டும். ஒரு சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையை யாரும் இழக்காதபடி, தாராள மனப்பான்மையுடன் வரவேற்பின் கதவுகளைத் திறந்து விட வேண்டும். இறுதி நாளின்போது, மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு என்ற உவமையில், நான் அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; என்று கூறிய கடவுளுடைய வார்த்தை நம் இதயங்களில் ஒலிக்கட்டும், ஏனென்றால், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று கூறியுள்ளார் இயேசு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2025, 13:19