MAP

இறைஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள், இறைஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள்,  

நேர்காணல் – இறைஊழியர் லூயிஸ் ரவேலின் எதிர்நோக்கின் திருப்பயணம்

தென்னிந்தியாவிற்கு தமிழகத்திற்கு மறைப்பணியாற்ற வந்து 1853ம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் கோயம்புத்தூர் பிரான்சிஸ்குவின் காணிக்கை அன்னை சகோதரிகள் சபையை நிறுவினார் இறைஊழியர் ஜோசப் லூயிஸ் ரவேல்.
நேர்காணல் - அருள்சகோதரி மார்டினா அல்போன்ஸ் மேரி

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிரான்ஸ் நாட்டு மறைப்பணியாளரான அருள்பணி ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள், 1824ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் நாள் பிறந்தார். MEP எனப்படும், வெளிநாட்டு மறைபோதகர் சபையில் சேர்ந்து, 1848ம் ஆண்டு ஜூன் 17ம் நாள் குருத்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். தென்னிந்தியாவிற்கு தமிழகத்திற்கு மறைப்பணியாற்ற வந்த இவர், 1853ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் கோயம்புத்தூர்  பிரான்சிஸ்குவின் காணிக்கை அன்னை சகோதரிகள் சபையை நிறுவினார். அவர் கடுகுவிதைபோல தூவிய விதை இன்று அச்சபை அசகோதரிகளின் தாராள உள்ளத்தாலும், மறைப்பணி ஆர்வத்தாலும் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது, இத்தாலி, பிரான்ஸ், சாம்பியா, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கடுகு மரம்போல கிளைபரப்பி மறைப்பணியினை சிறப்புடன் ஆற்றி வருகின்றது. அவரது விண்ணகப் பிறப்பின் 143 ஆவது ஆண்டினை நினைவுகூரும் ஜனவரி 31 வெள்ளிக்கிழமையாகிய இன்று இறைஊழியர் ஜோசப் லூயிஸ் அவர்கள் மறைப்பணி வாயிலாக ஆற்றிய எதிர்நோக்கின் திருப்பயணம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க இருப்பவர் அருள்சகோதரி மார்டினா அல்போன்ஸ் மேரி.

பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபையைச் சார்ந்தவர் அருள்சகோதரி மார்டினா அல்போன்ஸ் மேரி. திருஅவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், புனிதராக்கும் வழிமுறைக்கான பட்டய பயிற்சி பெற்றுள்ளார். தற்போது தங்களது சபை நிறுவனர் இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் ரவேலின் புனிதர் பட்ட திருப்பணியில் மறைமாவட்ட வேண்டுகையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அருள்சகோதரி அவர்களை இறைஊழியர் ஜோசப் லூயிஸ் ரவேல் அவர்களின் எதிர்நோக்கின் திருப்பயணம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள்சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜனவரி 2025, 11:53