MAP

அருள்பணி ஆரோக்கிய தாஸ் க. ச. பிரான்சிஸ்கன் ஒலி முதன்மை ஆசிரியர் அருள்பணி ஆரோக்கிய தாஸ் க. ச. பிரான்சிஸ்கன் ஒலி முதன்மை ஆசிரியர்  

நேர்காணல் – பிரான்சிஸ்கன் ஒலி இதழின் எதிர்நோக்கின் திருப்பயணம்

அருள்பணி ஆரோக்கிய தாஸ் அவர்கள், திருச்சிலுவை தன்னாட்சி கல்லூரியின் பேராசிரியராக ஊடக துறையில் பணியாற்றிக்கொண்டு புனித அந்தோணியார் திருத்தலத்தின் துணை அதிபராகவும், பிரான்சிஸ்கன் ஒலி தமிழ் கத்தோலிக்க மாத இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்
நேர்காணல் - அருள்பணி ஆரோக்கிய தாஸ் க.ச.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமைதியின் தூதராய் வாழ்ந்து, அன்பு உறவுகளை அனைவரிடமும் வளர்த்தவர் புனித பிரான்சிஸ் அசிசியார். பகையுள்ள இடத்தில் பாசத்தையும்; வேதனையுள்ள மனதில் மன்னிப்பையும்; ஐயமுள்ள சூழல் நம்பிக்கையையும்; இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும்; துயரம் நிறைந்த இதயத்தில் மகிழ்ச்சியையும் விதைத்தவர். கப்புச்சின் சபையினரால் நடத்தப்படும் பிரான்சிஸ்கன் ஒலி பத்திரிக்கையின் எதிர்நோக்கின் பயணங்களைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி ஆரோக்கியதாஸ் க.ச.

அருள்பணி.  பேராசிரியர். அ. ஆரோக்கியதாஸ் க.ச. அவர்கள் இளங்கலைப் பட்டத்தை (Visual Communication) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், முதுகலைப் பட்டத்தை சென்னை லொயோலா கல்லூரியிலும் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (Visual Communication) முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்திருக்கும் அருள்தந்தை ஆரோக்கியதாஸ் அவர்கள்,ஊடகப் பணியில் சிறப்பான பணிகளை செவ்வனே செய்து வருபவர். அச்சு ஊடகத்தின் மூலமாக இரு முறை முதன்மை ஆசிரியராக பணியாற்றியவர். மாதா தொலைக்காட்சி அனுபவங்களை பெற்றவர். நற்செய்திப் பணி மற்றும் உளவியல் பணியை ஊடகத்தின் வாயிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணொளிகளை வலையொளி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பதிவேற்றி பகிர்ந்திருப்பவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ஐந்தாயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மேல் உந்துதல் உரையாற்றி ஊக்குவித்தவர். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என்று பலருக்கு சிறப்பு உரையாற்றி ஊக்குவிப்பவர், மென் திறன் பயிற்சியாளர், மனநல ஆலோசகர். தற்போது திருச்சிலுவை தன்னாட்சி கல்லூரியின் பேராசிரியராக ஊடக துறையில் பணியாற்றிக்கொண்டு புனித அந்தோணியார் திருத்தலத்தின் துணை அதிபராகவும், பிரான்சிஸ்கன் ஒலி தமிழ் கத்தோலிக்க மாத இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தை அவர்களை பிரான்சிஸ்கன் ஒலி பத்திரிக்கை பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜனவரி 2025, 11:42