தடம் தந்த தகைமை - பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், (மத் 11:28) என்றார் இயேசு.
உளமொன்றி மன்றாட யூத சமூகத்தில் சமயம், சட்டம், பொருளாதாரம், அரசியல், மரபு, இனம், கலாச்சாரம் என்ற பெயரால் நூற்றுக்கணக்கான விதிமுறைகள் பாமர மக்களின் தலைமேல் சுமத்தப்பட்டன. சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; (மத் 23:4) என இயேசு யூதத் தலைவர்களைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டும் நிலையே நிஜமாயிருந்தது. சாமானிய மக்கள் கடினமாக
உழைத்தும் உருக்குலைக்கப்படும் அவலம் கண்டே இயேசுவின் இளைப்பாறுதலுக்கான அழைப்பு இவ்வாறு விடுக்கப்பட்டது.
இறந்தபின் இளைப்பாறுதலுக்காக இறைஞ்சி மன்றாடும் இந்த உலகில் வாழும்போதே வாழ்விழந்தோர்க்கு இளைப்பாறுதல் வழங்கிட முன்வந்த மகாத்மா இயேசு. இன்று சமூகத்தில் ஆதிக்க நிலையினரால் அடிமையாக்கப் பட்டவர்க்கும், அது பற்றிய விழிப்புணர்வு இன்றி வாழ்வோர்க்கும் இளைப்பாறுதல் அளிக்கும் பெருங்கடமை நமதே. அந்த ஆறுதலும் ஆற்றுப்படுத்தலும் சாதி, சமய, நிற, மொழி எல்லைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும். அதுவே இயேசு காட்டும் இளைப்பாற்றும் வழி. அன்பு மனம் கொண்டவரால் அயலார்க்கு உதவாமல் இருக்க இயலாது.
இறைவா! என்னை நீர் சுமப்பது போல் நானும் பிறரைச் சுமக்கும் உள்ள உறுதியைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்