சூடானிலிருந்து 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய மோதல் காரணமாக, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சூடானில் இருந்து வெளியேறி, தெற்கு சூடானுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்கில் ஒரு பகுதியினர் சூடான் நாட்டின் புலம்பெயர்ந்தோராக இருக்கும் நிலையில், பெரும்பாலான தென் சூடான் நாட்டவர்கள் மட்டுமே தாயகம் திரும்புகின்றனர் என்றும், தென் சூடான், ஏற்கனவே தீவிர வறுமை மற்றும் பரவலான உணவுப் பற்றாக்குறை உட்பட நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன், ஊடுருவலை சமாளிக்கப் போராடுகிறது என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
அந்நாட்டிற்கான Christian Aid என்ற நிறுவனத்தின் இயக்குனர் ஜேம்ஸ் வானி அவர்கள், சூடானில் நிகழ்ந்து வரும் போர், தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு ஆகிய இரண்டின் கடுமையான தாக்கம் குறித்து எடுத்துரைத்துள்ளதையும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஸ்காட்லாந்து அரசின் மனிதாபிமான அவசர நிதியம், 5,000 பேருக்கு மேல் அவசரகால பண மானியங்களுக்காக Christian Aid நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது என்றும், அதன் உள்ளூர் துணைவர்கள் வழியாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுகிறது என்றும் கூறியுள்ளது அச்செய்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்