MAP

அரச கரூவூலத்தைக் காண்பிக்கும் அரசன் எசேக்கியா அரச கரூவூலத்தைக் காண்பிக்கும் அரசன் எசேக்கியா 

தடம் தந்த தகைமை - பாபிலோனிலிருந்து தூதர் வருதல்

மெரோதாக்கு, எசேக்கியா நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு, அவனுக்கு மடலும் அன்பளிப்பும் அனுப்பி வைத்தான். எசேக்கியா அவர்களை வரவேற்று, தம் கருவூலம் அனைத்தையும் அவர்களுக்குக் காட்டினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அக்காலத்தில் பாபிலோனியரின் மன்னன் பலதானின் மகன் மெரோதாக்கு, எசேக்கியா நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு, அவனுக்கு மடலும் அன்பளிப்பும் அனுப்பி வைத்தான். எசேக்கியா அவர்களை வரவேற்று, தம் கருவூலம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார். அதன் அரசு முழுவதிலும், தம் அரண்மனையிலும் இருந்தவற்றில் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை. இறைவாக்கினர் எசாயா அரசர் எசேக்கியாவிடம் வந்து, “அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு எசேக்கியா, “வெகுதூரத்திலிருக்கும் நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று மறுமொழி கூறினார். அவர், “உம் அரண்மனையில் எதைப் பார்த்தனர்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா “என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தனர். என் சேமிப்புக் கிடங்கில் நான் அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை” என்றார்.  அப்பொழுது எசாயா எசேக்கியாவை நோக்கி, “ஆண்டவர் கூறுவதைக் கேளும்: இதோ! நாள்கள் வரும்! அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும் ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும். மேலும், நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர்” என்று சொன்னார். அப்பொழுது எசேக்கியா எசாயாவை நோக்கி, ‘ஆண்டவரின் வார்த்தையாக நீர் கூறியது நல்வாக்கே!’ என்றார். ஏனெனில், அவர் தம் வாழ்நாள்களில் அமைதியும் பாதுகாப்பும் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜனவரி 2025, 11:38